சவூதி மக்காவில் உம்ரா கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

மக்கா (26 டிச 2020): புதிய கோவிட் வைரஸின் பயம் தொடரும் நிலையில் , மக்காவில் உள்ள ஹராமில் கட்டுப்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய கோவிட் வைரஸின் பரவல் அதிகரித்திருப்பதால் சவூதி அரேபியா சர்வதேச விமான சேவை கடல் போக்குவரத்து ஆகியவற்றை ஒருவாரம் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே ஏற்கனவே கோவிட்டின் கட்டுப்பாடு மக்கா ஹரமில் உள்ள நிலையில், புதிய சூழ்நிலைக்கேற்ப மேலும் கட்டுப்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களின் வருகை தற்காலிகமாக நிறுத்தி…

மேலும்...

ஏழு மாதங்களுக்குப் பிறகு புனித மக்கா பெரிய மசூதிக்குள் பொதுமக்கள் தொழுகைக்கு அனுமதி!

மக்கா (18 அக் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏழு மாதங்களுக்குப் பிறகு புனித மக்காவிற்குள் சவூதி மற்றும் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் இன்று (18 அக்டோபர் 2020) சில விதிமுறைகளின் அடிப்படையிலும் தளர்வுகள் அடிப்படையிலும் அனுமதிக்கப் பட்டனர். ஏற்கனவே அறிவித்தபடி இன்று நடைமுறைக்கு வந்த படிப்படியான திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மக்காவிற் கு ஒரு நாளைக்கு சுமார் 40,000 வழிபாட்டாளர்கள் மற்றும் 15,000 உம்ரா யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே…

மேலும்...

புனித மக்காவில் உம்ரா யாத்திரைக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அனுமதி!

மக்கா (02 அக் 2020): வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மக்காவிற்கு உம்ரா யாத்திரீகர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற மக்கா தலத்திற்கு யாத்ரீகர்கள் வரத் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஏழு மாதங்களாக இந்த தடை அமலில் இருந்து வரும் நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் மீண்டும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவிருக்கிறது. மூன்று கட்டங்களாக யாத்ரீகர்களுக்கு தடை விலக்கப்படவிருக்கிறது. முதல் கட்டமாக சவுதி அரேபிய குடிமக்கள்…

மேலும்...

மிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020!

மக்கா (30 ஜூலை 2020): கொரோனா பரவலால் இவ்வருடம் நடைபெறுமா? என்ற கேள்விக்குறியுடன் இருந்த ஹஜ் யாத்திரை மிகக்குறைந்த ஹஜ் யாத்ரீகர்களுடன் மிகுந்த கட்டுப்பாடுகளுடனும், சமூக இடைவெளியுடனும் தொடங்கியது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 4 மாதங்களாக இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவில் வழிபாடுகளுக்கு பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வருட உம்ராவும் மார்ச் மாதம் இடையில் நிறுத்தப்பட்டது. எனவே இவ்வருடம் ஹஜ்ஜும் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. எனினும் இவ்வருடம் மிகக்குறைந்த யாத்ரீகர்களுடன்…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – மக்கா செல்ல உள்நாட்டு யாத்ரீகர்களுக்கும் தற்காலிக தடை!

ஜித்தா (04 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் முஸ்லிம்களின் புனித இடமான மக்காவிற்கு உள்நாட்டு யாத்ரீகர்கள் செல்லவும் தற்காலிக தடை விதிக்கப்படுள்ளது. கோவிட் – 19 (COVID-19) எனப்படும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலகமெங்கும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக சுகாதார மையம் செய்வதறியாது தவிக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்களின் புனித இடங்களான மக்கா மதீனாவுக்கு உம்ரா யாத்திரை செல்லும்…

மேலும்...