கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கோவை (05 மார்ச் 2020): கோவையில் மசூதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- இன்று (வியாழன்)காலை கணபதி வேதம்பாள் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் எந்தவித உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை விரைந்து கைது…

மேலும்...

எரிக்கப்பட்ட மசூதியை காப்பற்ற முயன்ற இந்துக்கள் – மசூதி இமாம் தகவல்!

புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி அசோக் நகரில் உள்ள மசூதிக்கு இந்துத்துவ வன்முறையாளர்கள் தீ வைத்துக் கொளுத்தியபோது அவர்களிடமிருந்து மசூதியைக் காப்பாற்ற அப்பகுதியின் இந்துக்கள் போராடியதாக மசூதி இமாம் தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில் மஜ்பூர், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இந்துத்துவ வன்முறையாளர்கள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். இந்த வன்முறையின்போது டெல்லி அசோக் நகர் மசூதி…

மேலும்...

டெல்லி மசூதியை அடித்து நொறுக்கும் வன்முறையாளர்கள் – வீடியோ!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறையின்போது மசூதி மீது தீ வைத்ததோடு, மசூதியை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர் வன்முறையாளர்கள். டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்த வன்முறையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் வன்முறையாளர்கள் மசூதி…

மேலும்...

லண்டன் மசூதியில் பரபரப்பு – இமாம் மீது கத்தி குத்து- கைதானவனிடம் போலீஸ் தீவிர விசாரணை!

லண்டன் (23 பிப் 2020): லண்டன் மசூதியில் தொழுகை நடத்தும் இமாம் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தியவனை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய லண்டனில் 1944ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மசூதி ஒன்று உள்ளது. அங்கு தொழுகைக்காகவும் சுற்றிப் பார்க்கவும் கூட்டம் வருவது வாடிக்கை. இந்நிலையில் தொழுகையை வழிநடத்தும் இமாம் மீது ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான். இமாமுக்கு வயது 70. சம்பவம் நடந்த நேரத்தில் பள்ளிவாசலில் கிட்டத்தட்ட 100 பேர் இருந்ததாக…

மேலும்...

மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல – முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்!

புதுடெல்லி (30 ஜன 2020): மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள் மசூதிக்கு செல்வதில் எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெண்களை வழிபாட்டுத் தலங்களில் அனுமதிப்பது தொடர்பான விசாரணையில் இதுகுறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், “, மசூதிகளில் வழிபாட்டுக்காக…

மேலும்...

சமூக நல்லிணத்திற்கு ஒரு சான்று – மாங்கல்ய ஓசையுடன் மசூதியில் நடந்த இந்து திருமணம்!

காயங்குளம் (19 ஜன 2020): கேரள மாநிலம் காயங்குளத்தில் ஜும்மா மசூதியில் இந்து திருமணம் நடைபெற்று சமூக நல்லிணக்கத்திற்கு மேலும்  ஒரு சான்றாக அமைந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சோராவள்ளி கிராமத்தில் உள்ள அசோகன் – சிந்து தம்பதிகள் மகள் அஞ்சு. அசோகன் இரண்டு வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார். இதனால் சிந்து குடும்பம் கடும் சிரமத்தில் மூழ்கி இருந்தது. இந்நிலையில் அஞ்சுவுகும் சரத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. மகளின் திருமணத்திற்காக, அருகில் இருந்த முஸ்லிம்…

மேலும்...