ராமர் கோவில் அறக்கட்டளையில் தலித்துகளும் சேர்ப்பு – அமித் ஷா தகவல்!

புதுடெல்லி (05 பிப் 2020): அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கடளையில் தலித் உள்பட 15 அறங்காவலர்கள் இடம்பெறுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசாங்கத்தால் அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் என்று அதன் அரசியலமைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் அறிவித்த ஒரு மணி நேரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா, அறங்காவலர்கள் தொடர்பான அறிவிப்பை  அமித்…

மேலும்...

NRC-யை அமல்படுத்தும் எண்ணம் இல்லை – உள்துறை அமைச்சகம் விளக்கம்!

புதுடெல்லி (04 பிப் 2020): நாடு முழுவதும் என்.ஆர்.சியை இப்போதைக்கு அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதுல் அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசிக்கு தற்போதைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் மக்களிடம் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக…

மேலும்...

தைரியமிருந்தால் சாவர்கருக்கு பாரத ரத்னா கொடுத்துப்பாருங்கள் – பாஜகவை மிரட்டும் சிவசேனா!

புதுடெல்லி (04 பிப் 2020): மத்திய அரசுக்கு தைரியமிருந்தால் சாவர்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்துப்பாருங்கள் என்று சிவசேனா எம்பி விநாயக் ரௌத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய சிவசேனை எம்பி விநாயக் ரௌத் , “உங்களுக்கு தைரியம் இருந்தால், சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குங்கள். தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) சிவசேனை எதிர்க்கும். நீங்கள் எங்களுக்கு ஹிந்துத்வாவை கற்றுத் தர வேண்டாம். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பெண்களுக்கு…

மேலும்...

மத்திய பட்ஜெட் திருப்தியில்லை – ஸ்டாலின் அறிக்கை!

மத்திய அரசின் பட்ஜெட்டில் திருப்தியில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: மத்திய பா.ஜ.க அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ”பொருளாதார தேக்க நிலைமை”, “கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி”, “கிராமப்புற மக்களின் வருவாய்”, “வேலைவாய்ப்பின்மை” உள்ளிட்ட மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல், பா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது….

மேலும்...

இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு!

புதுடெல்லி (28 ஜன 2020): இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் வேடித்துள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்தும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இநிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையை பெறும் அகதிகள் தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது குறித்த சான்றிதழ், விண்ணப்பங்களுடன் இணைப்பது கட்டாயம் என டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி…

மேலும்...

ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி (27 ஜன 2020): ஏர் இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது ஏர் இந்தியா விமான நிறுவனமானது சுமார் ரூ.58,000 கோடி கடனில் சிக்கித் தவித்து வருகிறது. இது தவிர அந்நிறுவனத்திற்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்களுக்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை அடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 % பங்குகளையும், விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்க, தனியார்…

மேலும்...

அனாதை உடல்களை அடக்கம் செய்யும் முஹம்மது ஷெரீபுக்கு பத்ம ஸ்ரீ விருது!

புதுடெல்லி (26 ஜன 2020): மத்திய அரசின் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் ஒருவர் 80 வயதான முகமது ஷரீப். உ.பி.,யில் ஜாதி மத பேதமற்று பல ஆதரவற்ற உடல்களை இவர் அவரவர் மத வழக்கப்படி அடக்கம் செய்துள்ளார். இவரின் சேவைக்காக…

மேலும்...

மத்திய அரசிடம் போராடிக் கொண்டு இருக்கிறோம் – தமிழக அமைச்சர் பரபரப்பு தகவல்!

சென்னை (24 ஜன 2020): மாநிலங்களின் உரிமைகள் மத்திய அரசின் கைக்கு சென்று கொண்டிருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாண்டியராஜன், “மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரம் சிறுகச் சிறுக மத்திய அரசுக்குக் கீழ் செல்வதாகவே தெரிகிறது. இதற்கு ஒரு நல்ல உணாரணம். ஜி.எஸ்.டி வரிமுறை. ஜி.எஸ்.டி வந்ததில் இருந்து நமக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைப் பெற மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜி.எஸ்.டி…

மேலும்...

நீங்கள் ஹல்வா என்றால் நான் மிளகா – நிர்மலா சீதாராமனின் ஹல்வா விழாவை கிண்டல் செய்த உவைசி

புதுடெல்லி (23 ஜன 2020): மத்திய நிதியமைச்சகம் கொண்டாடிய ஹல்வா விழாவை அசாதுத்தீன் உவைசி கிண்டலடித்துள்ளர். மத்திய நிதி அமைச்சகம் ஹல்வா விழாவை அதன் தலைமையகத்தில் கொண்டாடியது. இந்த விழாவிற்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிலையில் இந்த விழா குறித்து கறீம் நகரில் பேசிய உவைசி, “ஹல்வா என்பது இந்தியாவின் எந்த மொழியிலும் உள்ள வார்த்தை கிடையாது….

மேலும்...