தூக்குத் தண்டனை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு மனு!

புதுடெல்லி (22 ஜன 2020): தூக்குத் தண்டனைகளின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது. நிர்பயா வன்புணர்வு கொலை குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டும் குறிப்பிட்ட நாளில் தண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிப் போகிறது. இதனால் நாட்டில் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையிலும், தூக்குத் தண்டனை விவகாரத்தில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. முக்கிய வழக்குகளில்…

மேலும்...

மீண்டும் ரிசர்வ் வங்கியில் ரூ 30 ஆயிரம் கோடி பணம் கேட்கும் மத்திய அரசு!

புதுடெல்லி (21 ஜன 2020): மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஏற்கனவே இருமுறை பணம் பெற்றதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக ரூ. 30 ஆயிரம் கோடி பணம் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியானது 2018-ஆம் நிதியாண்டில் ரூ. 10 ஆயிரம் கோடியும், 2019-ஆம் நிதியாண்டில் ரூ. 28 ஆயிரம் கோடியும் ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு வழங்கியிருந்தது. இந்நிலையில் 2019-20 ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மொத்தமாக ரூ. 90 ஆயிரம் கோடியை பங்கு…

மேலும்...

ஜூன் 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்!

புதுடெல்லி (21 ஜன 2020): வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் நாடு முழுவதும் ஜூன் மாதம் 01-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாய விலைக்…

மேலும்...

நிர்மலா சீதாராமனின் அமைச்சர் பதவி பறிப்பு?

புதுடெல்லி (20 ஜன 2020): மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யபடலாம். அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த பதவியிலிருந்து அவர் மாற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சராக பொறுப்பேற்று யார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த மத்திய அமைச்சரவை…

மேலும்...

டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச்செயல் – ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (19 ஜன 2020): ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச்செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , “ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட “சுற்றுச்சூழல் அனுமதியும்” “மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டமும்” தேவையில்லை என்று, சுற்றுச்சூழலையும் வெகுமக்கள் எண்ணத்தையும் பின்னுக்குத் தள்ளிச் சிறுமைப்படுத்தி, மத்திய பா.ஜ.க. அரசு கார்ப்பரேட் அணுகுமுறையுடன் அறிவித்திருப்பதற்கு திராவிட…

மேலும்...

குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே – ஆர் எஸ் எஸ்ஸின் அடுத்த திட்டம்!

மொராதாபாத் (18 ஜன 2020): குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் திட்டத்திற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இல் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை வலியுறுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ், ‘இரண்டு குழந்தைகள்’ கொள்கை வடிவத்தில் கொண்டு வரும் எந்தவொரு சட்டத்தையும் ஆதரிக்கும். இது காலத்தின் தேவை என்று…

மேலும்...

குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் அமுலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி (11 ஜன 2020): தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், ஜனவரி 10ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய சமூகத்தினர் பெரும்பான்மை வகிக்கும் நாடுகளில் இருந்து சிறுபான்மையினராக இருக்கும் இந்து, சீக்கிய…

மேலும்...

காஷ்மீர் மக்களின் நெஞ்சில் பாலை வார்த்த உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (10 ஜன 2020): இணையதள சேவை இல்லாமல் இருந்து வரும் காஷ்மீர் மக்கள், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு குறித்து அறிந்து மிகவும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். பிற மாநிலங்களில் இருந்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள்…

மேலும்...

வட மாநிலங்களுக்கு 5908 கோடி, தமிழகம் கேரளாவுக்கு நாமம்!

புதுடெல்லி (06 ஜன 2020): வெள்ள நிவாரணமாக வட மாநிலங்களுக்கு 5908 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ள மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு பெப்பே காட்டிவிட்டது. கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு 5,908.56 கோடி ரூபாயை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் உத்திர பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும். ஆனால் பெரிதும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரளாவுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யபப்டவில்லை. அதேபோல கஜா புயலால் மிகப்பெரிய…

மேலும்...