பிரபல நடிகை சாலை விபத்தில் மரணம்!

பெங்களூரு (27 மே 2020): பிரபல ரியாலிட்டி ஷோவின் மாடலும் சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். மெபினா மைக்கேல் செவ்வாய்க்கிழமை மாலை மாண்டியா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 75ல் நாகமங்கள தாலுகாவில் உள்ள தேவிஹள்ளி அருகே ஒரு டிராக்டர் மோதியதில் அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. . மெபினா, தனது இரண்டு நண்பர்களுடன் பெங்களூருவில் இருந்து கோடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது. அந்த காரில் மெபினாவுடன் நான்கு…

மேலும்...

புலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ!

முசாபர்பூர் (27 மே 2020): புலம் பெயர்கையில் இறந்த தாயை குழந்தை ஒன்று எழுப்பும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் கையில் பணம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்லும் நிலை உண்டானது. வழியில் உணவு இன்றியும் விபத்தில் சிக்கியும் சிலர் மரணம் அடைந்தனர். இது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத்திய அரசு…

மேலும்...

இலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்!

கொழும்பு (26 மே 2020): இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (55) இன்று காலமானார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 1990ல் இருந்து இவர் அந்த கட்சியில் இருக்கிறார். அந்நாட்டு தொழிற்சங்கத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக முன்னேற்ற அமைச்சராகவும் அவர் இருந்தார். இந்நிலையில் வீட்டில் மயங்கி விழுந்த ஆறுமுகன் தொண்டமானை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். ஆனால்…

மேலும்...

100 கிலோ மீட்டர் நடந்த புலம்பெயர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்!

லூதியானா (26 மே 2020): 100 கிலோமீட்டர் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் பிந்தியா மற்றும் அவருடைய கணவர் ஜதின் ராம் ஆகியோர் வேலை செய்துவந்துள்ளனர். 20 வயதைக் கடந்திருக்கும் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா ஊரடங்கின் காரணமாக 50 நாள்களுகும் மேலாக வேலையின்றி தவித்த அவர்கள், சொந்த ஊர் செல்வதற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் நடக்கத் தொடங்கினர். 9 மாத கர்ப்பிணி…

மேலும்...

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!

மும்பை (25 மே 2020): பிரபல இந்தி மற்றும் பெங்காலி நகைச்சுவை நடிகர் மோஹித் புற்று நோயால் உயிரிழந்தார். கடந்த ஆறு மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை மோஹித் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவருடைய உடலில் நோய் தீவிரமடைந்ததால், சனிக்கிழமை, மதுராவில் இருக்கும் அவரது இல்லத்தில் மோஹித் உயிர் பிரிந்தது. உவா’, ‘மிலன் டாக்கீஸ்’ சல்மான் கானுடன் ‘ரெடி’, பரினீதி சோப்ராவுடன் ‘ஜபாரியா ஜோடி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் மோஹித். ராணி முகர்ஜி,…

மேலும்...

அபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்!

அபுதாபி (24 மே 2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் உள்ள பள்ளியில் பணிபுரிந்த மூத்த இந்திய ஆசிரியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 50 வயதான ஹிந்தி ஆசிரியர், கடந்த மே 7ம் தேதி இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நோய்த் தொற்றால் இன்று (மே 24) பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஹிந்தி ஆசிரியர் கையாண்ட வகுப்புகளுக்கு ஆக்கப்பூர்வமான அம்சத்தை கொண்டு…

மேலும்...

அரசின் மெத்தனம் – புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தொடர் மரணம் – இன்றும் நேர்ந்த கொடூரம்!

லக்னோ (16 மே 2020): அரசின் மெத்தனத்தால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மரணம் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை எதுவும் எடுக்காமல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்தஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை தங்கள் மாநிலத்திற்கு அழைத்து செல்ல மத்திய அரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறபோதும், கட்டணம் ஏழை…

மேலும்...

தொடரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உயிரிழப்புகள்!

புதுடெல்லி (14 மே 2020): கொரோனா ஊரடங்கை காரணமாக புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது தொடர்ந்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் இருந்து சுமார் 70 தொழிலாளர்களைக் ஏற்றிய லாரி ஒன்று உத்தரபிரதேசம் சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதிகாலை 3 மணியளவில் லாரி மத்திய பிரதேசம் குணாவில் ஒரு பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த…

மேலும்...

இந்தி நடிகர் ரிஷிகபூர் மரணம்!

மும்பை (30 ஏப் 2020): புற்று நோய் பாதிப்பு காரணமாக பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் காலமானார் கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் சம்பந்தமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் சிகிச்சை பெற்று 2019-ம் ஆண்டு நாடு திரும்பினார். இந்நிலையில்நேற்று இரவு இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடல் சோர்வடைந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் மும்பை எச்.என்.ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு புற்றுநோய் சம்பந்தமான நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருளுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும்,…

மேலும்...

பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் மரணம்!

மும்பை (29 ஏப் 2020): பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் (54) மும்பையில் புதன்கிழமை காலமானார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்ஃபான் கான். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இர்ஃபான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே…

மேலும்...