திருச்சியில் அதிர்ச்சி – அக்கா தங்கை மயங்கி விழுந்து அடுத்தடுத்து மரணம்!

திருச்சி (25 ஏப் 2020): திருச்சி அருகே இளம் பெண்களான அக்காவும் தங்கையும் மயங்கி விழுந்து அடுத்தடுத்து மரணம் அடைந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் கனகராஜ்.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி ஆவார். இவருக்கு சாந்த மீனா என்ற மனைவியும் உண்டு. கனகராஜ் சாந்த மீனா தம்பதியினருக்கு லோகநாதன் என்ற 15 வயது மகனும், கோகிலா 13, லலிதா 11 என இரு மகள்களும் உள்ளனர்….

மேலும்...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை குரு மரணம்!

திருவனந்தபுரம் (06 ஏப் 2020): பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குருவும் மலையாள இசையமைப்பாளருமான அர்ஜுனன் மாஸ்டர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. 1968-ல் இசையமைப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கினார் அர்ஜுனன். 200 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். கே.ஜே. யேசுதாஸ், அர்ஜுனனின் இசையில் தான் முதலில் பாடினார். 1981-ல் அர்ஜுனன் இசையமைத்த Adimachangala என்கிற மலையாளப் படத்தில் முதல் முதலாக கீ போர்டு வாசித்தார் ரஹ்மான். இதனால் அர்ஜுனன் மீது…

மேலும்...

கொரோனாவால் இறந்தவர் ஒருவர் மது இல்லாமல் இறந்தவர் ஐந்து பேர்!

திருவனந்தபுரம் (30 மார்ச் 2020): கேரளாவில் ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது கிடைக்காமல் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பகுதியாக் கேரளாவில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. கேரளாவின் திருச்சூர்…

மேலும்...

பரவை முனியம்மா மரணம்!

மதுரை (29 மார்ச் 2020): பிரபல நாட்டுப்புற பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா(76) காலாமானார். தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர், ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் மூலம் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வந்தவர், சிங்கம் போல பாடல் மூலம் பிரபலமானவர். பின்னர் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தவர், சிறுநீரக கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி…

மேலும்...

கொரோனா: கட்டுப்படுத்த முடியாத நிலையில் இத்தாலி – கதறும் மக்கள்!

ரோம் (27 மார்ச் 2020): கொரோனாவின் கோரப் பசிக்கு இத்தாலியில் இதுவரை 8515 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று வெகு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, இந்த கொரோனாவிற்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8215 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இத்தாலியில் உயிரிழந்தவர்களில் 31 மருத்துவர்களும் 67 பாதிரியார்களும் அடங்கும்.

மேலும்...

பிரபல தமிழ் இளம் நடிகர் திடீர் மரணம்!

சென்னை (27 மார்ச் 2020): பிரபல தமிழ் இளம் நடிகர் சேதுராமன் திடீரென மரணம் அடைந்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் நடித்திருந்தவர் நடிகர் டாக்டர் சேதுராமன். அதன் பிறகு வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் சேதுராமன் தனது 36 வது வயதில் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...

பால் வாங்க வெளியில் சென்றவர் போலீஸ் தாக்குதலில் மரணம்!

கொல்கத்தா (26 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் பால் வாங்க வெளியில் சென்றவர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 681 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

கொரோனாவுக்கு ஒரே நாளில் 2000 பேர் உயிரிழப்பு!

பெய்ஜிங் (25 மார்ச் 2020): உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 2000 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் பல உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த பதற்றம் இந்திய மக்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு செயல்படுத்தப்படுவதாக நேற்றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த 21 நாட்களில் மளிகை, காய்கறி, பால், இரைச்சி போன்ற அத்தியாவசிய கடைகள்…

மேலும்...

கொரோனாவை தொடர்ந்து மிரட்டும் அடுத்த வைரஸ் ஹன்டா!

யூனான் (24 மார்ச் 2020): உலகையே கொரோனா மிரட்டிக் கொண்டிருக்க சீனாவில் ஹான்டா வைரஸுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் தற்போது உலகின் 160க்கும் மேலான நாடுகளில் பரவி உள்ள மக்களை அசாத்தியமாக புரட்டி போட்டு வருகிறது. இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் வைரஸிலிருந்து மக்களை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் புதிதாக ஹன்டா வைரஸ் (HantaVirus) எனும் நோய் ஒன்று…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்!

நாகர்கோவில் (22 மார்ச் 2020): நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மரணம் அடைந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டத்துக்கு திரும்பி வந்த 49 வயதுடைய ஒரு ஆண், 9 மாத குழந்தை, கேரளத்தில் இருந்து வந்த 26 வயதுடைய ஒருவர் 59, 52 வயதுடைய 2 என 5 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சனிக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பப்பட்டிருந்தது….

மேலும்...