மாணவர்களுக்கு இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டீர்களே மிஸ்டர் ரஜினி?

சென்னை (06 பிப் 2020): அரசியல்வாதிகளைப் பற்றி எச்சரிப்பது இருக்கட்டும், சினிமா ஸ்டார்கள் மாணவர்களை பயன்படுத்துவதை ஏன் எச்சரிக்கவில்லை? என்று நெட்டிசன்கள் ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் முஸ்லிம் மதகுருமார்களையும் ரஜினி சாடியிருந்தார். மேலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது மிகவும் கவனமாக ஆலோசித்து ஈடுபட வேண்டும் என்றும்…

மேலும்...

என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களில் ரஜினியும் சிக்குவார்? – தமிமுன் அன்சாரி அதிரடி!

சென்னை (05 பிப் 2020): நடிகர் ரஜினியின் முன்னோர்கள் ஆவணம் உண்டா இல்லையேல் என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களில் ரஜினியும் சிக்குவார் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று ரஜினி தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி, “கந்துவட்டி உள்ளிட்ட சட்ட விரோத தொழில்களை ரஜினி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில்,…

மேலும்...

இந்து பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை (02 பிப் 2020): “அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெஞ்சு முழுவதும் வன்மம் குடியிருக்கிறது!” என்று திமுக தலைவர ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் செய்தி சேனலில் நேர்காணல் ஒன்றில் பேசிய அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது! தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கில் இஸ்லாமிய அமைப்புகள் சில செயல்படுகின்றன!” என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்…

மேலும்...

மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல – முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்!

புதுடெல்லி (30 ஜன 2020): மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள் மசூதிக்கு செல்வதில் எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெண்களை வழிபாட்டுத் தலங்களில் அனுமதிப்பது தொடர்பான விசாரணையில் இதுகுறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், “, மசூதிகளில் வழிபாட்டுக்காக…

மேலும்...

2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்களை எரித்துக் கொன்றவர்களுக்கு ஜாமீன்!

புதுடெல்லி (28 ஜன 2020): 2002 குஜராத் வன்முறையில் முஸ்லிம்களை எரித்துக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 2002 குஜராத் கலவரத்தில் 2000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தில், சர்தார்பூராவில் 33 முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்டதும் அடங்கும். அந்த வழக்கு தனியாக நடைபெற்று வந்தது. இதில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும் அவர்கள் மத்திய பிரதேசத்துக்கு…

மேலும்...

ஒரு கோடி முஸ்லிம்கள் வெளியேற்றப் படுவார்கள் – பாஜக தலைவர் பேச்சு!

கொல்கத்தா (20 ஜன 2020): மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக உள்ள ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரணியில் அம்மாநில பாஜக தலைவர் திரு. திலீப் கோஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தில். என்.ஆர்.சியை அமல்படுத்த கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேற்கு வங்கத்தில் ஒரு கோடி இஸ்லாமியர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் மீண்டும் பங்களாதேஷிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்…

மேலும்...

தொண்டர்கள் மத்தியில் விஜய்காந்த் உருக்கமான பேச்சு!

தமக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே தமது முதல் கடவுள் என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் உருக்கமாக பேசியுள்ளார். சென்னை கொரட்டூரில் தே.மு.தி.க சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. 101 பானைகளில் பொதுமக்களுடன் இணைந்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பொங்கல் விழாவைக் கொண்டாடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். பிறகு மேடையில் இந்தியாவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்வதாகக் கூறினார். இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில்…

மேலும்...

குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் அமுலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி (11 ஜன 2020): தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், ஜனவரி 10ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய சமூகத்தினர் பெரும்பான்மை வகிக்கும் நாடுகளில் இருந்து சிறுபான்மையினராக இருக்கும் இந்து, சீக்கிய…

மேலும்...