உத்திர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த களமிறங்கும் விவசாயிகள்!

லக்னோ (13 ஜூன் 2021): உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரிய சரியை சந்திக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடப்பதால் பல்வேறு மாநில மக்களும் இந்த தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று. அங்கு மருத்துவ கட்டமைப்புகள் சரியில்லை என்று பாஜகவினரே குற்றம் சாட்டும் அளவுக்கு மோசமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான…

மேலும்...

யார் இந்த சித்தார்த்? மோடி அரசை எதிர்க்க காரணம் என்ன? – பரபரப்பு பின்னணி!

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்திய நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்க மத்திய அரசின் கையாலாகதத் தனத்தை உலக நாடுகள் கண்டித்தப்படி உள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. அதேவேளை திரையுலக பிரபலங்கள் அனைவரும் மவுனம் சாதிக்கின்றனர். ஆனால் நடிகர் சித்தார்த் மட்டும் சமூக வலைதலங்களில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அவருக்கு பாஜகவினரால் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்., ஆனால் தனது மத்திய அரசிற்கு எதிரான கேள்விகள் தொடரும்…

மேலும்...

சட்டசபையில் சுதந்திரப் போராளிகளின் படத்துடன் சாவர்க்கர் படம்!

லக்னோ (20 ஜன 2021): உத்திர பிரேதச சட்டசபையில் சுதந்திரப் போராளிகளின் படத்துடன் சாவர்க்கரின் படமும் நிறுவப்பட்டமைக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி காட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தொடர்பாக உத்தரபிரதேசத்தில் பெரும் எதிர்ப்பு வெடித்தது. சாவர்க்கரின் படம் உ.பி. சட்டசபை விதான் பரிஷத்தில் எடுக்கப்பட்டது. உபி சட்டசபையில் சாவர்க்கரின் படத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வெளியிட்டார். இதனை அடுத்து சுதந்திரப் போராளிகளின் படத்துடன் சாவர்க்கரின் படமும் நிறுவட்டப்பட்டன. இந்த சம்பவத்திற்கு காங்கிரசும் சமாஜ்வாடி கட்சியும் கடும் எதிர்ப்பு…

மேலும்...

லவ் ஜிஹாதுக்கு எந்த ஆதாரமும் இல்லை – நீதிமன்றத்தில் வாங்கி கட்டிக் கொண்ட யோகி அரசு!

அலகாபாத் (07 ஜன 2021): உத்திர பிரதேச அரசின் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒரு முஸ்லீமுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று யோகி ஆதித்யநாத் அரசாங்கம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்து வாங்கி கட்டிக் கொண்டது. உத்திர பிரதேசத்தில் லவ்ஜிஹத் மதமாற்ற தடை சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களை குறி வைத்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி அக்‌ஷய் குமார் தியாகி என்பர் அளித்த புகாரின் அடிப்படையில் நதீம் எனபவர் முசாபர்நகரில்…

மேலும்...

ராமர் கோவிலுக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் முடிச்சு போடும் யோகி ஆதித்யநாத்!

லக்னோ (18 டிச 2020): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பிடிக்காதவர்களே விவசாயிகள் போராட்டத்தை பின்னின்று இயக்குகிறார்கள் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். விவசாய சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள யோகி ஆதித்யநாத், இதுகுறித்து கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை பிடிக்காதவர்கள் விவசாயிகளை உசுப்பேற்றி நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ‘இந்தியா ஒரு சிறந்த இந்தியாவாக இருக்க விரும்பாத மக்கள் போராட்டத்தின் பின்னால் உள்ளனர். ஆதரவு…

மேலும்...

மக்கள் மனதிலிருந்து பெயரை மாற்ற முடியாது – யோகிக்கு உவைசி பதிலடி!

ஐதராபாத் (30 நவ 2020): ஐதராபாத் நகரின் பெயரை பாக்யாநகர் என மாற்றப்படும் என்று உ..பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு அசாதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். ஐதராபாத் நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது யோகி ஆதித்யநாத் பேசும்போது, “ஐதராபாத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், ஐதராபாத்தின் பெயர் பாக்யநகர் என்று மாற்றப்படும்.”என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் AIMIM தலைவர் உவைசி கூறுகையில், “ஐதராபாத்தின் பெயரை மாற்றினாலும் மக்கள் மனதிலிருந்து ஐதராபாத் என்ற பெயரை…

மேலும்...

ஐதராபாத் பெயர் மாற்றம் – யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு!

ஐதராபாத் (29 நவ 2020): தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை பாக்யநகர் என பெயர் மாற்றுவதில் என்ன தவறு உள்ளது? என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நடந்த பிரச்சாரத்தின்போது ஐதராபாத் பெயர் மாற்றம் தொடர்பாக அவர் பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: “ஐதராபாத்தை பாக்யநகர் என பெயர்…

மேலும்...

லவ் ஜிஹாத் விவகாரம் – யோகி அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு!

லக்னோ (24 நவ 2020): வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் மனித உரிமையில் அரசு தலையிட முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லவ் ஜிஹாத் குற்றச்சாட்டுக்கு எதிராக சல்மத் அன்சாரி மற்றும் பிரியங்கா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. இருவேறு மதத்தினர் திருமணம் செய்து கொள்வதை லவ் ஜிஹாத் என்ற பெயரில் திசை திரும்பும் வேலையை பாஜக தலைமையிலான உபி அரசு செய்து வருகிறது. திருமணத்திற்காக மதம் மாறுவதையும் உபி…

மேலும்...

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நிதிஷ்குமார் காட்டம்!

பாட்னா (05 நவ 2020): பிகாரில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நிதிஷ் பேசிய பேச்சு , நிதிஷ் குமார் பாஜக கூட்டணி இடையே பிளவை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கடுமையாக சாடி பேசினார். பிகாரில் ஊடுருவியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று யோகி பேசிய பேச்சு, நிதிஷ்குமாரை ஆவேசப்பட்ட வைத்துள்ளது. கதிஹாரில் நடந்த பேரணியில் பேசிய யோகி ஆதித்யநாத்,…

மேலும்...

மாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்!

லக்னோ (28 அக் 2020): மாடுகளை வெட்டுவோர் சிறை செல்வதில் எந்தவித மாற்றமுமில்லை என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பசுவதை சட்டம் தவறாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது. இந்நிலையில் உபியில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலின் ஒரு பகுதியாக பிரச்சார பேரணியில் கலந்து கொண்டபோது யோகி ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக பசுவதை சட்டம் தொடர்பாக கைது செய்யப்பட ரஹீமுத்தின் வழக்கின் விசாரணையில் பசு…

மேலும்...