கிறிஸ்துமஸ் தினத்தன்று ராகுல் காந்தியுடன் இணையும் கமல் ஹாசன்!

சென்னை (19 டிச 2022): கிறிஸ்துமஸ் தினத்தன்று பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கைகோர்க்கிறார் கமல்ஹாசன். இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறுகையில், “ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தேசிய தலைநகரில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் எம்என்எம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்தார். ஏற்கனவே பாரத் ஜோடோ யாத்ராவில் ஸ்வரா பாஸ்கர் உட்பட…

மேலும்...

காங்கிரஸுக்கு எதிராக பாஜகவுக்கு ஊடகங்கள் உதவுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஜெய்ப்பூர் (16 டிச 2022): பாஜகவை ஆட்சியில் இருந்து காங்கிரஸ் வீழ்த்தும் என்று ராகுல் காந்தி கூறினார். பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் சர்வாதிகாரிகளின் கட்சி அல்ல. வட மாநிலங்களில் பாரத் ஜோடோ யாத்ரா வெற்றியடையாது என்று சிலர் கூறியதாகவும் ஆனால் மக்கள் ஆதரவுடன் பாரத் ஜோடோ யாத்திரை வெற்றி பெற்றுள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும்…

மேலும்...

100 வது நாளை எட்டியுள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை!

ஜெய்பூர் (16 டிச 2022): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை 100வது நாளை எட்டியுள்ளது. இன்று ராஜஸ்தானில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்ரா பயணத்தில் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். வெறுப்பு அரசியலுக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைப்போம் என்ற முழக்கத்தை ராகுல் காந்தியின் நடைப்பயணம் எழுப்பி வருகிறது. ஏழு மாநிலங்களுக்குப் பிறகு, எட்டாவது மாநிலமான ராஜஸ்தானில் யாத்திரை பயணம் தொடர்கிறது. 2798 கி.மீ. தூரம் கொன்ட இந்த பயணம் ஜனவரி 26ம் தேதி ஸ்ரீநகரில்…

மேலும்...

என் மீதான தாக்குதலுக்கு பாஜக ரூ 1000 கோடி செலவழித்துள்ளது – ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு!

புதுடெல்லி (28 நவ 2022): என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுப்பதற்காக பா.ஜ.க. ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவழித்து உள்ளது என ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யான ராகுல்காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். இந்திய ஒற்றுமை பயணம் என அழைக்கப்படும் இந்த பாதயாத்திரையானது காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை தொடரும். இதுவரை கேரளா, கர்நாடகா,…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்!

இந்தூர் (19 நவ 2022): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அடையாளம் தெரியாத நபர் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து மத்திய மற்றும் மாநில போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தின் ஆதாரம் குறித்து மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் வந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. ஒரு இனிப்பு கடையில் தபால் மூலம் கிடைத்த…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையில் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி – வீடியோ!

ஐதராபாத் (03 நவ 2022): இந்திய தேசிய காங்கிரஸ் (INC) நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெர்சி அணிந்த சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி. அந்த சிறுவனின் பேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டு, பந்துவீசுவதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதுடன் வீடியோ முடிகிறது. இந்தியாவை ஒருங்கிணைக்கும் நோக்கில் காங்கிரஸின்…

மேலும்...

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை விளம்பரத்தில் சாவர்க்கர் படம்!

மாண்டியா (06 அக் 2022): காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி.சாவர்க்கரின் படம் மீண்டும் இடம் பெற்றுள்ளது. கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், மாண்டியாவில் அமைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் போர்டில் சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டது. சாந்திநகர் எம்.எல்.ஏ என்.ஏ.ஹாரிஸ் பெயரில் ஃப்ளக்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த போஸ்டர் தாங்கள் ஒட்டவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ விளக்கம் அளித்துள்ளார். சாவர்க்கருடன், ராகுல்…

மேலும்...

முஸ்லிம் சிறுமியுடன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பாஜக விஷமப்பிரச்சாரம்!

புதுடெல்லி (21 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையின் போது பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்திருந்த சிறுமியின் கையை பிடித்தபடி ராகுல் காந்தி நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்து பாஜகவின் வகுப்புவாத பிரசாரம். செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பாஜகவுக்கு இது பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது…

மேலும்...

காங்கிரஸுக்கு காந்தி குடும்பம் இல்லாதவர் தலைவராகிறார்!

புதுடெல்லி (20 செப் 2022): 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வருவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கலோட் மற்றும் கேரள மாநிலம் எம்பி சசி தரூர் ஆகியோர் களத்தில் உள்ளனர். அசோக் கலோட் காந்தி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலைவர். கட்சியில் சீர்திருத்தம் கோரிய கோஷ்டியின் தலைவராக சசி தரூர் உள்ளார். காங்கிரஸின் ஜி23 குழுவின்…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

புதுடெல்லி (15 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையை அடுத்து இன்னொரு யாத்திரையை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் புதிய யாத்திரை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கில் குஜராத்தில் இருந்து கிழக்கே அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்யும் புதிய யாத்திரையை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், பாரத்…

மேலும்...