பொருளாதாரம் குறித்து தெரிந்தால்தானே அதைப்பற்றி சிந்திக்க முடியும் – மோடி மீது ராகுல் பாய்ச்சல்!

ஜெய்ப்பூர் (29 ஜன 2020): பொருளாதாரம் குறித்த புரிதல் பிரதமருக்கு இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யுவ ஆக்ரோஷ் எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பின்பற்றப்பட்ட பொருளாதார மதிப்பீடுகள் மீது கணக்கிட்டால் இப்போதுள்ள பொருளாதார வளர்ச்சி…

மேலும்...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்திலும் தீர்மானம் நிறைவேறியது!

கொல்கத்தா (27 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நான்காவது மாநிலமாக மேற்கு வங்கத்திலும் தீர்மானம் நிறைவேறியது. சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் திங்களன்று நான்காவது மாநிலமாக மாறியது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) திரும்பப் பெறவும், குடிமக்களின் தேசிய பதிவேட்டை (NRC) முன்மொழியப்பட்ட பான்-இந்தியா செயல்படுத்தவும் இது அரசாங்கத்தை கோரியது. பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை மேற்கு வங்க நாடாளுமன்ற…

மேலும்...

கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்!

ஜெய்ப்பூர் (25 ஜன 2020): கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது. மேலும், “அரசு முடிவை கேட்காமல் எந்தவொரு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது”…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ராஜஸ்தான் அரசு முடிவு!

ஜெய்ப்பூர் (20 ஜன 2020): கேரளா, பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் ராஜஸ்தான் அரசும்…

மேலும்...