துபாயில் கொரோனா வைரஸ் குறித்த வதந்தி – சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!

துபாய் (30 ஜன 2020): கொரோனா வைரஸ் குறித்து வதந்தி கிளப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என துபாய் சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் துபாய் குறித்து கரோனா வைரஸ் பாதித்தவர் குறித்த வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது வதந்தி என்று கூறியுள்ள துபாய் போலீஸ் வதந்தி பரப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் கரோனா வைரஸ் பாதித்த சீனாவை சேர்ந்த நான்கு பேர் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும்…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டத்தை கொச்சைப் படுத்திய ஊடகங்கள்!

புதுடெல்லி (19 ஜன 2020): டெல்லி ஷஹீன்பாக் குடியுரிமை எதிர்ப்பு போராட்டத்தை ஊடகங்கள் சில கொச்சைப்படுத்தியுள்ளன. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டம்…

மேலும்...

5 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு குறித்து வெளியான தகவல் வெறும் வதந்தி – அமைச்சர் விளக்கம்!

கோபிச்செட்டிபாளையம் (19 ஜன 2020): 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வேறு மையங்களில் நடைபெறும் என்று பரவும் தகவல் வதந்திதான் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட முகாமில் குத்துவிளக்கு ஏற்றியும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தாா். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெறாமல் மாற்று…

மேலும்...

ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படுவது உண்மையா? – கோவில் நிர்வாகி விளக்கம்!

மும்பை (18 ஜன 2020): ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை வதந்தி எனக் கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது. ஷீரடி சாயிபாபா பிறந்த இடம் பர்பனி மாவட்டம் பத்ரி என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவிலை மூடப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே, ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படமாட்டாது என்று தெளிவுபடுத்த விரும்புவதாக சாயிபாபா கோவிலின் தலைமைச் செயல் அலுவலர் தீபக் முக்லிகர்…

மேலும்...