ஒமானில் சுற்றுலா பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் முறை ரத்து!

மஸ்கட் (17 டிச 2020): ஓமானில் சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் வருவதற்கு முன்பு அவர்களுக்கு கோவிட் ஆய்வு தேவையில்லை என்று பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் கோவிட் ஆய்வுக்கு உட்படுத்தப் படுவார்கள். அங்கு கோவிட் சோதனைக்குப் பிறகு பிறகு குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தனிமைப்படுத்தல் இருக்காது. இந்தியா உட்பட மொத்தம் 103 நாட்டினர் விசா இல்லாமல் ஓமானுக்குள் நுழைந்து 10 நாட்கள் வரை…

மேலும்...

வளைகுடா நாடுகளுடனான உறவு மிக முக்கியமானது: மத்திய அமைச்சர்!

புதுடெல்லி (28 நவ 2020): பொருளாதார மந்த நிலை உள்ள நிலையில் வளைகுடா நாடுகளுடனான உறவு மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு விரும்புகிறது. இதன் அடிப்படையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு பல்வேறு துறைகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தைகள் வளைகுடாவுடனான உறவை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. . தற்போதைய பொருளாதார மந்தநிலை ஒரு பெரிய…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு துபாயில் கைதிகள் விடுதலை!

துபாய் (27 நவ 2020): ஐக்கிய அரபு எமிரேட் டிசம்பர் 2 தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 472 கைதிகளை விடுவிப்பதாக துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார். விடுவிக்கப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் இருப்பார்கள். ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் சயீத் அல் காசிமி, சிறைகளில் இருந்து 219 கைதிகளை விடுவிப்பதாக அறிவித்துள்ளார். வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கு முழு ஆதரவையும் தருவதாக…

மேலும்...
Qatar tops In Corona Cure 1

கொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை!

கத்தார் (18 ஜூலை,2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் புதியதொரு சாதனையை படைத்துள்ளது. அந்நாட்டில் தற்பொழுது வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் 96 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளிலேயே சவூதி அரேபியாவிற்கு அடுத்த படியாக அதிகளவு கொரோனா பாதிப்பைக் கொண்டிருந்த நாடு கத்தார் ஆகும். மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமான் போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் 50,000 க்கும் அதிகமான…

மேலும்...
waives Rs 1.52 crore bill

மருத்துவக் கட்டணம் 1.52 கோடி! தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை!

துபை (17 ஜூலை 2020): கொரானோ-வால் இறந்தவர்களின் உடல் உறுப்புக்களைத் திருடிக் கொள்ளும் சம்பவங்கள் நம் நாட்டில் மக்களை துன்ப அதிர்ச்சிக்குள்ளாக்க, துபை-இல் கொரோனா-வுக்கு சிகிச்சை பெற்று வந்த, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 42 வயதான கட்டட தொழிலாளி ஒட்னாலா ராஜேஷ் என்பவருடைய சிகிச்சைக் கட்டணம், 1.52 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது துபை-இன் மருத்துவமனை ஒன்று! வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், இந்திய துணை தூதரகத்தின் தன்னார்வலரான சுமந்த் ரெட்டி,…

மேலும்...

குவைத்தில் 8 இலட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்.!

குவைத் (07 ஜூலை 2020): கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பொருளதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பெட்ரோல் மட்டுமே முக்கிய வருவாய் ஆதாரமாகக் கொண்ட குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு நிலைகள் ஆகிய காரணங்களால் தற்போது கடும் வேலைவாய்ப்பின்மையை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, 48 இலட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்-தில் அந்நாட்டு குடிமக்கள் வெறுமனே 13 லட்சம் மட்டுமே! மற்ற அனைவரும்,…

மேலும்...

ஜூலை 7 முதல் விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி!

துபாய் (22 ஜூன் 2020): இதுவரை உலகம் கண்டிராத கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான பாதிப்புகளை சந்தித்துள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறையும் அதனை சார்ந்த விமான போக்குவரத்து சேவை மற்றும் பயண சேவைகள் வழங்கக்கூடிய அனைத்து நிறுவனங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சில மாதங்களுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்திருக்கும் தறுவாயில், ஒரு சில நாடுகள், தங்களின் நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விலக்கிக்கொண்டு வருகின்றன. உலக அளவில் சுற்றுலா…

மேலும்...

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்தியன் சோசியல் ஃபாரம் ஏற்பாடு செய்த ஆன்லைன் நிகழ்ச்சி!

ஜித்தா (19 ஜூன் 2020): உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்தியன் சோசியல் ஃபாரம் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. வெளிநாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் சமூக நல அமைப்பான இந்தியன் சோசியல் ஃபாரம் இரத்த நன்கொடையாளர்கள் குழு (ஐ.எஸ்.எஃப்) 5 ஆண்டுகளாக இரத்த தானத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டில் ‘நன்கொடையாளர்கள் பூங்கா (Donor’s Park)’ ரத்த தானம் வழங்கும் குழு மற்றும் ஒரு குறிப்பிட்ட இரத்த தேவைகளின் அடிப்படையில் இரத்த தானம்…

மேலும்...

அரபு நாடுகளில் வசிக்கும் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? – குமுறும் தமிழர்கள்!

சென்னை (15 ஜூன் 2020): அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்களை மீட்பதில் தமிழக அரசும் மத்திய அரசும் மெத்தனம் காட்டி வருவதாக அங்கு வசிக்கும் தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உலகமெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் வெளி நாடுகளிலிருந்து ஊருக்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர இந்திய அரசு கொண்டு வந்துள்ள வந்தே பாரத் திட்டத்தின் விமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது….

மேலும்...

கலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா!

ஜித்தா (28 மே 2020): கொரோனோ நுண்கிருமி தொற்று பேரிடர் 24 மணி நேர ஊரடங்கில்… விடுமுறை காலத்தில்… ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் நடத்திய விகடகவி 2.0 எனும் நகைச்சுவை கலந்துரையாடல் நிகழ்ச்சியான Lockடவுன் கலாட்டா நிகழ்ச்சி நடந்தது. சென்ற டிசம்பர் மாதம் ஜெத்தா மாநகரில் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் நடத்திய மாபெரும் நிகழ்ச்சியான விகடகவியில் நவீன விகடகவி எனும் விருதினைப் பெற்ற கலக்கப் போவது யாரு சீசன் 7 இன் வெற்றியாளர் அசார் மீண்டும் இந்த…

மேலும்...