shaheen-bagh

டெல்லி ஷஹீன் பாக்கிலிருந்து களத்தை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை – போராட்டக் காரர்கள் திட்டவட்டம்!

புதுடெல்லி (20 பிப் 2020): ஷஹீன் பாக்கிலிருந்து வேறு இடத்திற்கு போராட்டக்களத்தை மாற்றும் எண்ணம் எதுவும் இல்லை என்று குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பான வழக்கு கடந்த 17 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது….

மேலும்...

சிஏஏ எதிர்ப்பு: அதிராம்பட்டினத்திலும் தொடங்கியது தொடர் போராட்டம்!

அதிராம்பட்டினம் (19 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஷாஹீன் பாக் மாடலில் அதிராம்பட்டினத்திலும் தொடர் போராட்டம் தொடங்கியது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை பின்பற்றி, தொடர் போராட்டம் அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இன்று மாநிலம் தழுவிய மாபெரும் அமைதி பேரணி சென்னையில்…

மேலும்...

டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் சரியானதுதான் – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (17 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் தேவையான ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், “பொதுமக்கள் ஒரு தீர்வுக்காக போராடுகிறார்கள்….

மேலும்...

அமித் ஷாவை ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் சந்திக்க போலீஸ் மறுப்பு!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷாஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் போராட்டக் காரர்கள், மத்திய அமைச்சர் அமித் ஷா வீட்டிற்கு பேரணியாக சென்று சந்திக்கவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் டெல்லி போலீஸ் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. தொலைக்காட்சி நேர்காணலில் டெல்லி தோல்வி குறித்து பேசியிருந்த அமித் ஷா, ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்கள்…

மேலும்...

அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி – ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் முடிவு!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களை தாண்டி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லி ஷஹீன்பாக்கில் நடக்கும் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷஹீன் பாக்கில் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக இரவுபகலாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை…

மேலும்...

டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி – இன்றும் ஒரு துப்பாக்கிச் சூடு!

புதுடெல்லி (07 பிப் 2020): டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக், ஜாமியா பல்கலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லி ஜாஃப்ராபாத் துணிக் கடை ஒன்றின் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்து வந்த அவர்கள்,  தொடர்ந்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்….

மேலும்...

ஷஹீன் பாக் ஜாலியன் வாலாபாக்காக மாறும் அபாயம் – உவைசி எச்சரிக்கை!

புதுடெல்லி (06 பிப் 2020): டெல்லி ஷஹின் பாக் போராட்டக் காரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தக்கூடும் வாய்ப்பு இருப்பதாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் கடும் குளிர் பனியையும் பொருட்படுத்தாமல் இடைவிடாது தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தால் வெறுப்படைந்துள்ள இந்துத்வா கும்பல்கள் போராட்டத்தை…

மேலும்...

பாஜகவுக்கே வாக்களியுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

புதுடெல்லி (05 பிப் 2020): பாஜக கூறுவதுபோல் நான் பயங்கரவாதி எனில் தாமரை சின்னத்திற்கே வாக்களியுங்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் வரும் பிப்.,08 ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தின்போது, பாஜ எம்பி., பர்வேஷ் வர்மா டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையே டில்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குஜ்ஜார் என்பவர், ஆம்ஆத்மி உறுப்பினர் என டில்லி போலீஸ் கூறியதற்கு ஆம்ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது….

மேலும்...

போலீசா? பாஜக செய்தி தொடர்பாளரா? – டெல்லி போலீசை விளாசும் ஆம் ஆத்மி!

புதுடில்லி (05 பிப் 2020): டெல்லி போலீசார் பா.ஜ.கவின் செய்திதொடர்பாளரை போல் பேசுவதாக ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் ஷாஹின் பாக் பகுதியில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது சமீபத்தில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான், அவனை கைது செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார், தற்போது அவர் ஆம்ஆத்மி கட்சியின் உறுப்பினர் எனக் கூறி, அதற்கு ஆதாரமாக போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அது தாக்குதல் நடத்திய கபில் குஜ்ஜார்,…

மேலும்...