ஸ்டாலின் டெல்லி பயணமும் எதிர் பார்ப்பும்!

சென்னை (12 ஜூன் 2021): ஸ்டாலினின் டெல்லி பயணம் பல்வேறு தரப்பிலும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 17 அல்லது 19 ஆகிய தேதிகளில் சந்திப்பு நிகழலாம் என கூறப்படுகிறது. டெல்லி பயணத்தின் போது குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நீட்…

மேலும்...

பதில் சொல்லுங்கள் முதல்வரே – குஷ்பூ கேள்வி

சென்னை (12 ஜூன் 2021): “உங்களுக்கு வந்தா அது இரத்தம், எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?” என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு, சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 21ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப்…

மேலும்...

முதல்வர் ஸ்டாலினின் கொரோனா கால அடுத்த அதிரடி!

சென்னை (08 ஜூன் 2021): சமீபத்தில், அத்தியாவசியப் பொருட்கள் விலை நிர்ணயச் சட்டம் (1986)-ன் கீழ் கொரோனா மருத்துவப் பொருள்களின் விலையை, கேரள முதல்வர் பினராயி விஜயன் நிர்ணயம் செய்திருந்தார். அதன்படி, பிபிஇ கிட் – ரூ. 273, என்95 முகக் கவசம் – ரூ.22, மூன்று அடுக்கு முகக் கவசம் – ரூ.3.90, சானிடைசர் 100 மி.லி. ரூ.55 என்ற அளவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழ் நாட்டு அரசின் அறிவிப்பின்படி இப்போது இருப்பதிலேயே,…

மேலும்...

கொரோனா நோயாளிகள் அருகில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் – நெகிழ்ந்த நோயாளிகள்!

(30 மே 2021): கோவையில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளின் அருகில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்தார். கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடக்கின்றன, லாக்டவுன் கட்டுப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று நேரடியாக ஆய்வு செய்தார். அதன் ஒரு கட்டமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இதில் நோயாளிகளிடம் அருகில் சென்ற…

மேலும்...

திமுக அரசுக்கு ஐஸ் வைக்கும் குஷ்பூ!

சென்னை (08 மே 2021): “திமுக அரசின் உத்தரவுகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்” என்று நடிகையும் பாஜகவில் சமீபத்தில் இணைந்தவருமான குஷ்பூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:- “தமிழக மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்பட வேண்டும். கொரோனோவுக்கு எதிரான போரில் அரசால் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மக்களின் பங்கும் முக்கியமானது. நம்மால் முடிந்த ஒத்துழைப்பை நாம் அளிப்போம். சிறு துளி பெருவெள்ளமாகும்!” என்று…

மேலும்...

மே 2 க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் – ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

சென்னை (13 ஏப் 2021): தந்தை பெரியார் சாலை பெயர் மாற்றத்தை மாற்றவில்லையென்றால் மே 2க்குப்பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்தது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ல் பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்ட போதும் அந்தப் பெயரே நீடித்து…

மேலும்...

ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு!

சென்னை (02 ஏப் 2021): சென்னை நீலாங்கரையில் ஸ்டாலின் மகள் செந்தாமரை விட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சபரீசன் வீட்டில் நடைபெறக்கூடிய வருமான வரி சோதனை சோதனையை முன்னிட்டு வீட்டில் இருக்கக்கூடிய யாரும் வெளியே உள்ளவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு வருமானவரித் துறையினர் தடை விதித்துள்ளனர். அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 4 பகுதிகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே…

மேலும்...

ஸ்டாலின் ராகுல் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் கொரோனாவால் மரணம்!

சேலம் (02 ஏப் 2021): சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் கொரானா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 4 நாட்களாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். முன்னதாக சேலத்தில் கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தி, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் ஜெயபிரகாஷும்…

மேலும்...

ராகுல் காந்தி, ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை?

சேலம் (29 மார்ச் 2021): நேற்று ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என தெரிகிறது. சேலத்தில் நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அணைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்பிரகாஷும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தற்போது கொரோனா…

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமி நீண்ட காலம் வாழ வேண்டும் – ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (28 மார்ச் 2021): எடப்பாடி பழனிச்சாமி நீண்ட காலம் வாழ்ந்து தி.மு.க. ஆளுகின்ற காட்சியை பார்க்க வேண்டும்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (28-03-2021), ஸ்டாலின் தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, காங்கேயத்தில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, “தி.மு.க.வை அழிக்க இதுவரை ஒருவர் பிறக்கவுமில்லை; இனியும் பிறக்கப் போவதில்லை. தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் இதுவரை அழிந்து போயிருக்கிறார்கள்; தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில்…

மேலும்...