நீக்கப்படுவாரா தயாநிதி மாறன் – புயலை கிளப்பும் விவகாரம்!

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தலைமைச் செயலகத்தில் கிளப்பிய சலசலப்பு அலை இப்போதைக்கு ஓயாது போல! தயாநிதியைவிடவும் இதில் அதிகமாக சிக்கிக் கொண்டு, பழி சுமப்பவர் திருமாவளவன். திமுக.வுக்காக திருமாவளவன் பாரம் சுமப்பது இது முதல் முறையல்ல. 2009 ஈழ இறுதிப் போர் காலத்தில், அவர் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது, கலைஞர் வற்புறுத்தலால் ராஜபக்‌ஷேவை சந்திக்கச் சென்ற குழுவில் இடம் பெற்றது, அதன் மூலமாக திமுக மீதான விமர்சனங்களுக்கு கேடயமாக தன்னை ஒப்படைத்தது,…

மேலும்...

கொரோனாவுக்கு இவங்கதான் காரணமா? -ஸ்டாலின் விளாசல்!

சென்னை (14 மே 2020): கொரோனா பரவலுக்கு காரணம் கோயம்பேடு மார்கெட் ஊழியர்கள் என்று பழி போடுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ” கொரோனா நோய்த்தொற்று குறித்து , சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. முகக்கவசம் வழங்க வேண்டும் எனச் சொன்னபோது , அதனை மறுத்து, “கொரோனா தமிழ்நாட்டுக்கு வராது” என்று முதலில் “ஆரூடம்” சொன்ன…

மேலும்...

சிறுமி மரணம் இதயமுள்ள எவரையும் துடிக்கச் செய்யும் – ஸ்டாலின் அறிக்கை!

சென்னை (11 மே 2020): சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை – கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி…

மேலும்...

இதையெல்லாம் நாங்கள் கேட்டால் அரசியல் என்பார் – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

சென்னை (03 மே 2020): ஊரடங்கிலும் டெண்டர் முறைகேட்டில் முதல்வர் எடப்பாடி படு பிசியாக உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டினால், “பேரிடர் நேரத்தில் கூடவா அரசியல்” என்று அப்பாவித்தனமாக ஒரு…

மேலும்...

ஸ்டாலின் மீதான கிண்டல் எதிரொலி – சன் டிவி தலைமை செய்தியாளர் நீக்கம்!

சென்னை (21 ஏப் 2020): சன் டிவி தலைமை செய்தியாளர் ராஜாவை நீக்கம் செய்து சன் டிவி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாறன் பிரதர்ஸ் நடத்தும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டலடித்து வந்த வந்த வாட்ஸ் அப் மீம் ஒளிபரப்பு செய்யப் பட்டதாகவும் இதன் எதிரொலியாக, சன் டிவியின் தலைமை செய்தியாளரான ராஜா நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ராஜா உட்பட மேலும் மூவரும் நீக்கப் பட்டுள்ளதாக ட்விட்டரில்…

மேலும்...

உண்மையை சொல்லுங்கள் – தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி!

சென்னை (19 ஏப் 2020): கொரோனா பரிசோதனை கருவி தமிழகத்திற்கு எத்தனை வாங்கப்பட்டது என்பது குறித்து வெளிப்படைத் தன்மை இல்லை என்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் தெரிவித்திருப்பதாவது: “கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சட்டீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது…

மேலும்...

எடப்பாடிக்கு எதிராக கொந்தளித்த பாஜக!

சென்னை (18 ஏப் 2020): “கொரோனா குறித்து எதிர்கட்சிகளுடன் விவாதிக்க எதிர் கட்சி தலைவர்கள் என்ன மருத்துவர்களா?” என்ற முதல்வர் எடப்பாடியின் கருத்துக்கு பாஜக கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடிக்குக் கோரிக்கை வைத்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தக் கோரிக்கையை நிராகரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மருத்துவ ஆலோசனை பெற எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா? கரோனா…

மேலும்...

பூனை கண்ணைக் கட்டிக் கொண்டால் பூலோகம் இருண்டு விடாது: ஸ்டாலின்!

சென்னை (17 ஏப் 2020): அரசியல் சுயநலத்துக்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. பேட்டி கொடுத்தே, அதில் தவறான செய்திகளைப் பேசி அரசியல் செய்தே, கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று மாநில அரசு நினைக்கிறது….

மேலும்...

கொரோனா வைரசும் திமுகவும் – பகீர் கிளப்பும் அமைச்சர்!

சென்னை (12 ஏப் 2020): கொரோனா நோய்த் தொற்று பரவ திமுக தான் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில்,கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க முதலமைச்சர் பழனிசாமி அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து செயல்பட வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் தட்டிக் கேட்கக் கூடாதா? இதில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.அரசாங்கம் முறையாக மக்களுக்கு செயல்படாவிடில் அரசாங்கத்தை திமுக செயல்பட…

மேலும்...

போக்குவரத்து காவலர் மரணம் – ஸ்டாலின் பரபரப்பு கருத்து!

சென்னை (09 ஏப்ரல் 2020): சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் 24 மணிநேர பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னை மயிலாப்பூர் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அருண்காந்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடன் அவர் அருகில்…

மேலும்...