எனக்கு வேறு வழி தெரியவில்லை – ஹிஜாப் தடை உத்தரவால் சிக்கித்தவிக்கும் மாணவி!

உடுப்பி (17 மார்ச் 2022): வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் அமல்படுத்தப்படுவதால் முஸ்லிம் மாணவிகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கல்வி நிறுவனங்கள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளன. சில மாணவிகள் முக்காடுகளை அகற்றிவிட்டு வகுப்புகளுக்குச் செல்ல முன்வந்துள்ளனர். உடுப்பியில் உள்ள அரசு எம்ஜிஎம் கல்லூரியின் மாணவி ஒருவர், தனது முக்காடை அகற்றிவிட்டு வகுப்பறைக்குச் செல்ல முடிவு செய்தபோது வகுப்பறையில் தனக்கு…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (16 மார்ச் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய அனைத்து மனுக்களையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் இஸ்லாத்தில் ஹிஜாப் அவசியமான ஒன்று அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நிதிமன்றத்தில் மாணவிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில்…

மேலும்...

ஹிஜாப் தடையை எதிர்த்து மார்ச் 17 அன்று மாநிலம் தழுவிய பந்த்!

பெங்களூரு (16 மார்ச் 2022): மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் 17 மார்ச் வியாழன் அன்று மாநிலம் தழுவிய பந்த் அறிவித்துள்ளன கர்நாடக -இ-ஷரியத் தலைவர், மௌலானா சாகீர் அகமது ரஷாதி பந்த் க்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான இந்த தீர்ப்பை எதிர்த்து நாங்கள் அனைத்து முஸ்லிம்களையும் ஒத்த எண்ணம்…

மேலும்...

ஹிஜாப் தடை – நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கடைகள் அடைப்பு!

பெங்களூரு (16 மார்ச் 2022): ஹிஜாப் தடை தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, தீர்ப்புக்கு எதிராக நாட்டின் பல நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தின் ஹிஜாப் தடையை உறுதி படுத்தும் வகையில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் அணிவது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்றும் கூறி செவ்வாயன்று தனது தீர்ப்பை அறிவித்தது. இது முஸ்லிம்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் மாணவர்கள் புதன்கிழமை பதாகைகளை…

மேலும்...

ஹிஜாப் தடை – நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரியில் போராட்டம்!

சென்னை (16 மார்ச் 2022): ஹிஜாப் தடை குறித்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உத்தரவை எதிர்த்து கோசங்களை எழுப்பினர். இதனால் அங்கு காவல்துறை குவிக்கப்பட்டது.

மேலும்...

ஹிஜாப் மத அடிப்படையில் அவசியமில்லையா? – உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு!

புதுடெல்லி (15 மார்ச் 2022): ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, “அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி முஸ்லிம் மாணவிகள் நிபா நாஸ் மற்றும் மணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இருவர் சார்பிலும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்த மனுவில், மத சுதந்திரம் மற்றும் மனசாட்சி சுதந்திரம் என்ற இரு வேறுபாட்டை உருவாக்குவதில் உயர்நீதிமன்றம் தவறிழைத்துள்ளதாக மனுதாரர்கள் மிகவும் தாழ்மையுடன் சமர்ப்பிப்பதாக…

மேலும்...

ஹிஜாப் தடை தீர்ப்பு எதிரொலி – பாதியில் வகுப்பறையை விட்டு வெளியேறிய மாணவிகள்!

பெங்களூரு (15 மார்ச் 2022): ஹிஜாப் தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பாதியிலேயே தேர்வை புறக்கணித்து மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இந்த…

மேலும்...

ஹிஜாப் அணிவது சட்டப்படி அவசியமில்லை – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

பெங்களூரு (15 மார்ச் 2022): வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதி அல்ல என்று கூறியுள்ளது. உடுப்பியில் உள்ள அரசுப் பல்கலைக்கழகப் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. பள்ளிச் சீருடையை பரிந்துரைப்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு மட்டுமே; அரசியலமைப்பு ரீதியாக…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை!

அலிகார் (13 மார்ச் 2022): உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு முக்கிய கல்லூரியில் “பரிந்துரைக்கப்பட்ட சீருடை” அணியாமல் வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைய ‘தடை’ அறிவிக்கப் பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண்களை கல்லூரிக்குள் நுழைய கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. அலிகார் ஸ்ரீ வர்ஷ்னி கல்லூரியில் சனிக்கிழமையன்று வகுப்பிற்குச் செல்லும் போது மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டாம் என்று கல்லூரி நிராகம் வலியுறுத்தியுள்ளது. இதனால் பல மாணவிகள் வகுப்பிற்குச் செல்லாமல் வீடு திரும்பினர். இதுகுறித்து B.Sc. இறுதியாண்டு…

மேலும்...

ஹிஜாப் அணிந்து கல்லூரி சென்ற மாணவி மீது ஏபிவிபி உறுப்பினர்கள் துன்புறுத்தல்!

மங்களூரு (05 மார்ச் 2022): கர்நாடகா மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவி ஹிஜாப் அணிந்ததற்காக அகில் பாரதிய விஸ்வ பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளார். பி. சதீஷா பாய் அரசு முதல் தர கல்லூரி மாணவி ஹிபா ஷேக், அகில் பாரதிய விஸ்வ பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்கள் தன்னை துன்புறுத்தியதாக பந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “நான்  கல்லூரியில் தேர்வு…

மேலும்...