மாணவர்கள் மத அடையாளங்களுடன் எந்த ஆடையும் அணியக்கூடாது – கர்நாடக நீதிமன்ற நீதிபதி!

பெங்களூரு (10 பிப் 2022): மாணவர்கள் மதம் சார்ந்த எந்த ஆடையையும் அணிய அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வியாழக்கிழமை தெரிவித்தார். கர்நாடகாவில் பள்ளி ,கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில், இதனை அனுமதிக்கக் கோரி, நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கல்லூரியில் மாணவர்கள் ‘ஹிஜாப்’ அணிவதற்கு மாநில அரசின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட இந்த மனுக்களை…

மேலும்...

ஹிஜாபுக்கு இங்கு அனுமதி உண்டு – மும்பை கல்லூரி விளக்கம்!

மும்பை (10 பிப் 2022): மும்பை கல்லூரி ஒன்றில் ஹிஜாப் தடை என்ற சர்ச்சைக்கு கல்லூரி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ‘ஹிஜாப், குங்காட், தாவணி போன்றவற்றை அணிந்த பெண் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை’ என்று மும்பையில் உள்ள ஒரு கல்லூரி தனது விதிமுறைகளில் எழுதியதாக சர்ச்சை எழுந்தது. தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், விதிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாக கூறியுள்ளது. கல்லூரி அறிக்கைகளின்படி, மும்பையின் மாட்டுங்கா பகுதியில் உள்ள எம்எம்பி ஷா கல்லூரியின்…

மேலும்...

விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் அவரசர மனு!

புதுடெல்லி (10 பிப் 2022): ஹிஜாப் தொடர்பான வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து தனக்கு மாற்றுவதற்கான மனுவை பட்டியலிட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை வைத்துள்ளார். இதனை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்த உத்தரவில், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் கைப்பற்றியுள்ளதாகவும், விசாரணையைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியது. வழக்கை மாற்றக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கும் கோரி,…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – பாகிஸ்தானுக்கு அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை!

ஐதராபாத் (10 பிப் 2022): இந்தியாவில் ஹிஜாப் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் தலையிட வேண்டாம் என ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை…

மேலும்...

பாஜகவும் அதன் ஆதரவாளர்களும்தான் உண்மையான தேச விரோதிகள் – சீமான்!

சென்னை (09 பிப் 2022): மாணவர்களின் மனங்களில் மதவாத நச்சுப்பரப்புரையை விதைத்து மதமோதலுக்கு வித்திடுவதாக பாஜக மீது சீமான் சாடியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக்கும்பல் நிகழ்த்தி வரும் வன்முறை வெறியாட்டங்களும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதிர்ச்சியளிக்கின்றன. கல்விக்கொள்கையையும், தேர்வு முறையையும் காவிமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தற்போது மாணவர்களின் மனங்களிலும் மதவாத…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தை கூடுதல் அமர்வு விசாரிக்க நீதிபதி உத்தரவு!

பெங்களூரு (09 பிப் 2022): பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு விசாரிக்கும் என கர்நாடக உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஒரே சீருடை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹிஜாப் அணித்து வந்த இஸ்லாமிய மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க மறுத்தது. இது சர்ச்சையானது. ஹிஜாபை அனுமதிக்கக் கோரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணாக்கர்களும் போராட்டத்தில் குதித்ததால்,…

மேலும்...

காவிக்கொடி ஏற்றப்பட்ட கம்பத்தில் மீண்டும் ஏற்றப்பட்ட தேசியக்கொடி!

சிமோகா (09 பிப் 2022): கர்நாடகா கல்லூரி ஒன்றில் தேசிய கோடி கம்பத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் காவி கோடி ஏற்றப்பட்ட நிலையில் அதில் மீண்டும் தேசிய கோடி ஏற்றப்பட்டது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்ககூடாது என உடுப்பி கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு அவர்களை கல்லுரிக்குள் அனுமதிக்காததால் சர்ச்சை வெடித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். அதேநேரத்தில் மற்றொரு தரப்பு மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்….

மேலும்...

வன்முறையாக மாறிய ஹிஜாப் தடை விவகாரம் – கல் வீச்சு, காவல்துறை தடியடி!

பெங்களூரு (08 பிப் 2022): கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தடை விவகாரம் வன்முறையாக மாறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்லூரி வரும் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப் பட்டதை அடுத்து ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நாடெங்கும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்நிலையில் செவ்வாயன்று கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள ரபகவிபனஹட்டியில் உள்ள அரசுப் பல்கலைக் கழக கல்லூரியில் இரு பிரிவினர் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை…

மேலும்...

ஹிஜாப் சர்ச்சை – முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய தலித் மாணவர்கள்!

உடுப்பி (07 பிப் 2022): கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாக தலித் மாணவர்கள் ஊதா துண்டு அணிந்து கொண்டு கல்லூரி வளாகத்திற்குள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பாஜக அரசை பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஹிஜாபுக்கு எதிராக ஆர் எஸ் எஸ், பாஜக மாணவர் அமைப்பினர் காவி துண்டு அணிந்து கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனை கண்டிக்கும் வகையிலும் முஸ்லீம் மாணவிகளுக்கு…

மேலும்...

கர்நாடகா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர மாணவிகளுக்கு அனுமதி!

உடுப்பி (07 பிப் 2022): பல நாள் போராட்டத்துக்குப் பிறகு, கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தபுரா பகுதியில் உள்ள அரசு கல்லூரி வளாகத்திற்குள் திங்கள்கிழமை ஹிஜாப் அணிந்த மாணவியர் நுழைய அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் தனி வகுப்பறைகளில் அமர வைக்கப்படுவார்கள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. குந்தபுராவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு இல்லை என்று உடுப்பி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.டி.சித்தலிங்கப்பா தெரிவித்தார். வெள்ளிக்கிழமை அரசு பியு கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து நுழைய…

மேலும்...