நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை – காங்கிரசுக்கு கடும் பின்னடைவு!

புதுடெல்லி (10 மார்ச் 2022): உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 272 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 121 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 03 இடங்களிலும், காங்கிரஸ் 03 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பஞ்சாப்…

மேலும்...

வாரணாசியில் வாக்குப் பெட்டிகள் திருட்டு – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

லக்னோ (09 மார்ச் 2022): உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் வாக்குப் பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வாரணாசியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். “2017 இல், கிட்டத்தட்ட 50 இடங்களில் பாஜகவின் வெற்றி வித்தியாசம் 5,000 வாக்குகளுக்கும் குறைவாக இருந்தது என்று சுட்டிக்காட்டினார். டிரக்கில்…

மேலும்...

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் துணை முதல்வர் – உவைசி!

லக்னோ (30 ஜன 2022): உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சியை தாக்கி பேசிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, யார் பெரிய இந்து கட்சி என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது என்று கூறினார். ANI இடம் பேசிய ஒவைசி, “யோகி ஆதித்யநாத் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே யார் பெரிய இந்து என்பதில் சண்டை நடக்கிறது. இருவரும் பெரிய இந்துவாக மாறுவதற்கு போட்டி போடுகிறார்கள். ஒருவர் ஒரு…

மேலும்...
Mamta-Banerjee

உத்திர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதியுடன் கரம் கோர்க்கும் மம்தா!

லக்னோ (19 ஜன 2022): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் சமஜ்வாதிக்கு ஆதரவாக ஈடுபடவுள்ளார். அகிலேஷ் யாவுடன் கரம் கோர்க்கும் மம்தா பானர்ஜி, லக்னோவில் அகிலேஷ் யாதவின் தேர்தல் பேரணியில் கலந்து கொள்கிறார். தனது கட்சி பிரச்சாரத்திற்கு மம்தாவை எஸ்பி துணைத் தலைவர் கிரண்மோய் நந்தா நேரில் அழைத்திருந்தார். பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் பேரணியின்போது மம்தா பானர்ஜி ஆன்லைனில் பேசுவார். அதேபோல, வாரணாசியில் நடைபெறும் பேரணியில் அகிலேஷுடன் மம்தாவும்…

மேலும்...

உ.பி பாஜகவுக்கு நெருக்கடி – சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர் பாஜகவில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்!

லக்னோ (14 ஜன 2022): உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் (எஸ்பி) இணைந்தனர். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் உறுப்பினர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் தரம் சிங் சைனி ஆகியோர் லக்னோவில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டனர். இவர்களுடன் ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள் பகவதி சாகர், வினய் ஷக்யா, முகேஷ் வர்மா, ரோஷன்லால் வர்மா…

மேலும்...

பாஜக அரசு தரும் கொரோனா தடுப்பூசியை நம்ப முடியாது – அகிலேஷ் யாதவ் பகீர்!

லக்னோ (02 ஜன 2021): பாஜக அரசின் தடுப்பூசியை நம்ப முடியாது என்று இப்போது தடுப்பூசி பெறவில்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கோவிட் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில் அகிலேஷ் யாதவ் இவ்வாறான கருத்தை முன்மொழிந்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் “எங்கள் தலைமையிலான அரசு அமைக்கப்படும் போது, ​​அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். அதேவேளை பாஜக அரசு வழங்கும் தடுப்பூசி நம்பத்தகுந்ததல்ல” என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அகிலேஷ் யாதவின் மகள்!

லக்னோ (25 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மகளும் கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்தார். லக்னோ கடிகார கோபுரம் அருகில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் அகிலேஷ் யாதவின் மகள் டினா கலந்து கொண்டார். அவர் அவரது நண்பர்களுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஊடகங்களில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் திட்டமிட்டு…

மேலும்...