டெல்லியில் 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள உவைசி கட்சி!

புதுடெல்லி (28 நவ 2022): டெல்லி மாநகராட்சி தேர்தலில் டெல்லியின் வெவ்வேறு சட்டமன்ற வார்டுகளில் AIMIM தனது 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேசிய தலைநகரில் தனது கட்சியின் பொது பேரணிகளில் உரையாற்றிய அசாதுதீன் ஒவைசி, இங்குள்ள பல பகுதிகள் வளர்ச்சியடையவில்லை என்று கூறினார். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஒவைசி கடுமையாக தாக்கிப் பேசினார். மேலும் டெல்லியின் வளர்ச்சிக்காக யாரும் உழைக்கவில்லை என்றும் முந்தைய அரசுகளை கடுமையாக சாடினார்.

மேலும்...

தமிழகத்தில் உவைஸி கட்சி வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு!

சென்னை (15 மார்ச் 2021): தமிழகத்தில் அ ம.மு.க. கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்பட்டு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி சார்பில் போட்டியிடும் 3 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் வக்கீல் அஹமத், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் முஜிபுர் ரஹ்மான், கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் அமீனுல்லா…

மேலும்...

திமுக மீது முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி!

சென்னை (02 ஜன 2021): அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் ஆசாதுதீன் ஒவைசியை அழைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ள நிலையில், திமுகவின் முடிவு குறித்து அதன் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் அதிருப்தி அடைந்துள்ளது. லீக்கைத் தவிர,திமுக ஏ கூட்டணியில் உள்ள இதர முஸ்லிம் கட்சிகளும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவைசி மற்றும் திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக செய்திகள்…

மேலும்...