அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் சேரும் மாணவர்கள் – அமைச்சர் மகிழ்ச்சி!

கோவை (12 செப் 2020): தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ- மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு முதியோர் உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார். அவரிடம் வருகிற 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளிக்கும் போது, தமிழகத்தில் தற்போது…

மேலும்...

மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசுப் பள்ளியின் அடடே அறிவிப்பு!

கடலூர் (22 ஆக 2020): கடலூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு ரூ 2000 அன்பளிப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயிலில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து கொண்டே வந்துள்ளது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை…

மேலும்...

கொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன? – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம் (வீடியோ)

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் சில, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துகின்றன. அதேவேளை அரசு பள்ளிகளின் நிலை குறித்து அவள் விகடன் விருது பெற்றவரும், சமூக சேவகியும் ஆசிரியையுமான மகாலட்சுமி அவர்கள் தமிழ் ஊடகப் பேரவைக்கு அளித்த நேர்காணல். பேட்டியாளர் யூசுப் ரியாஸ் நன்றி: தமிழ் ஊடகப் பேரவை

மேலும்...