உள்நாட்டு விமானங்களில் பயணம் மேற்கொள்ள ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்!

புதுடெல்லி (21 மே 2020): உள்நாட்டு விமான சேவை வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயணிகளுக்கான நடைமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. பயணிகளுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல், பெரும்பாலான விமானங்கள், விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது உள்நாட்டு விமான போக்குவரத்து வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

மேலும்...

ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் – நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா!

புதுடெல்லி (12 மே 2020): ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்ட விரோதம் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி குறித்தும், அதன் பரவல் குறித்தும் அறிய ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நோய் தாக்குதலுக்கு ஆளான நபரின் அருகில் சென்றால் நம்மை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, 5 கோடிக்கும் அதிகமானோரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில், விமானப் பயணிகள்…

மேலும்...