கோவையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணியினர் கைது!

கோவை (15 மார்ச் 2023): தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை நடப்பதாக சங்பரிவாரம் நடத்திய போலிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை எட்டயார் தெருவில் உள்ள மாகாளியம்மன் கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சூர்யபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில்…

மேலும்...

பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கும்பகோணம் (02 டிச 2022): தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவில் கடந்த மாதம் 21ம் தேதி காலை சக்கரபாணி என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கும்பகோணத்தில் தனது பெயர் பரபரப்பாகப் பேச வேண்டும் என்பதற்காகச் சொந்த வீட்டிலேயே சக்கரபாணி பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில்…

மேலும்...

தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது!

கும்பகோணம் (22 நவ 2022): தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம், மேலக்காவேரி, காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (38) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி (37) மகன் இனியன் (11). சக்கரபாணி இந்து முன்னணி மாநகர செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சக்கரபாணி மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அவருடைய வீட்டு வாசலில் வீசப்பட்ட கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறி…

மேலும்...

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கொரோனா பாதிப்பால் காலமானார்!

சென்னை (30 செப் 2020):இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் (94) கொரோனா பாதிப்பால் காலமானார். ராமகோபாலனுக்கு ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். இதையடுத்து, கடந்த 27-ம் தேதி மீண்டும் ராம கோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி வெளியான பரிசோதனை…

மேலும்...

நோன்பு கஞ்சிக்கு அரசு அரிசி வழங்கக்கூடாது – இந்து முன்னணி நீதிமன்றத்தில் மனு!

சென்னை (24 ஏப் 2020): நோன்பு கஞ்சிக்காக அரிசி வழங்குவதை அரசு நிறுத்தக்கோரி இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது. ரம்ஜான் நோன்பு நாளை முதல் இந்தியா முழுவதும் தொடங்குகிறது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக அரசு, கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்கும் என தெரிவித்தது. அதன்படி, 2895 பள்ளிவாசல்களுக்கு 5440 மெட்ரிக் டன்…

மேலும்...

கோவையில் பாஜக இந்து முன்னணியினர் இடையே மோதல் – 3 பேருக்கு அரிவாள் வெட்டு!

கோவை (02 மார்ச் 2020): கோவையில் பாஜக, இந்து முன்னணியினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை கவுண்டம்பாளையம் தீயணைப்பு அலுவலகம் அருகே இரு சக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டன. அதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட், ஹரீஷ் ஆகியோர் கார் ஓட்டி வந்த டிரைவருக்கு ஆதரவாகப்…

மேலும்...