ஹலால் அல்லாத கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல்!

பெங்களூரு (31 மார்ச் 2022): ஹலால் அல்லாத கோழிக்கறி கேட்டு முஸ்லிம் வியாபாரி மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஹிஜாப் விவகாரத்திற்குப் பிறகு கர்நாடகாவில் இந்துத்துவாவினர் பல்வேறு விதமாக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவிலுக்கு அருகில் முஸ்லீம் வியாபாரிகளுக்கு தடை விதித்தனர். தற்போது ஹலால் இறைச்சி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இந்நிலையில் ஹலால் கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகளை அடித்து உதைத்த சம்பவம் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஷிவமொகா பகுதியில் பஜ்ரங் தள் குழுவினர்…

மேலும்...

முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்க வேண்டாம் – இந்துக்களுக்கு பஜ்ரங்தள் அழைப்பு!

பெங்களூரு (30 மார்ச் 2022): கர்நாடகாவில் முஸ்லிம் வியாபாரிகளிடம் இறைச்சி வாங்க வேண்டாம் என பஜ்ரங்தளம் இந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பெங்களூருவில் நடந்த நீலமங்கல உகாதி கண்காட்சியில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் இந்து விற்பனையாளர்களைச் சந்தித்து முஸ்லிம் வியாபாரிகளிடம் இறைச்சி வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் கன்னடத்தில் அச்சிடப்பட்ட அறிவிப்பை பலருக்கும் பஜ்ரங்தள அமைப்பினர் விநியோகித்து வந்தனர். ஹிஜாப் தடையால் கர்நாடகாவில் இஸ்லாமிய வெறுப்பு தலைவிரித்தாடுகிறது. அங்கு முஸ்லிம்கள் கோவில் திருவிழாக்களில் வியாபாரம் செய்ய முடியாத…

மேலும்...

கோவையில் கோவிலில் இறைச்சி வீசிய ஹரி ராம்பிரகாஷ் குறித்து திடுக்கிடும் தகவல்!

கோவை (31 மே 2020): கோவையில் கோவிலில் இறைச்சியை வீசிய ஹரி என்பவருக்கு மனநோய் என்பதாக குற்றவாளி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள வேணுகோபால கிருஷ்ணசாமி கோயில் மற்றும் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் இறைச்சி வீசிய நபர் கைது செய்யப்பட்டார். இவரை கோயம்புத்தூர் நகர போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கோவையில் உள்ள கவுந்தம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.ஹரி ராம்பிரகாஷ் (48) என போலீசாரால் அடையாளம் காணப்பட்டார். சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கோயில்களுக்கு அருகே பைக்…

மேலும்...

எப்பா தமிழகத்தில் இறைச்சி விலை கிலோ இவ்வளவா?

சென்னை (05 ஏப் 2020): தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப் பட்டுள்ளதால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகள் வரத்து குறைந்துள்ளடு. இதனால் இறைச்சிகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆடு இறைச்சியின் விலை கிலோ ரூ 1200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால்…

மேலும்...