அழகிரி வீட்டுக்கு வந்த உதயநிதி – ஷாக்கான அழகிரி!

மதுரை (16 ஜன 2023): முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டுக்கு வந்து அழகிரியை சந்தித்து பேசியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நாளை நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது பெரியப்பாவும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மு.க.அழகிரியை நேரில் சென்று சந்தித்தார். டி.வி.எஸ். நகரில் உள்ள அழகிரி வீட்டில் அழகிரியை சந்தித்த உதயநிதி மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்ததாக தெரிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு…

மேலும்...

இனி நடிக்கப்போவதில்லை – உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (14 டிச 2022): தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். உதயநிதி இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த பதவியேற்பு விழா இன்று காலையில் நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்று கொண்டார். இவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப் பட்டுள்ளது. பதவியேற்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் உதயநிதி உதயநிதி பேசினார். அதில், “இனி சினிமாவில் நடிக்கப்…

மேலும்...

தமிழக அமைச்சரவையில் மாற்றம் – பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பு!

சென்னை (14 டிச 2022):தமிழ்நாடு அமைச்சரவை, இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக தேர்வாக உள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் நாளை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன்பின், பல்வேறு அமைச்சர்களின் இலக்காக்கள் மாற்றப்பட உள்ளன. இந்த இலாக்கா மாற்றத்தின்போது புள்ளியில் துறை-யைக் கூடுதலாக கவனித்து வரும் ஐ பெரியசாமியிடம் இருந்து,…

மேலும்...

அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை (13 டிச 2022): திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்கும் பரிந்துரை கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் கடந்த 10ஆம் தேதி கவர்னர் ஆர்.என். ரவிக்கு எழுதினார். இந்தக் கடிதத்தை முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் கவர்னரிடம் கொண்டு சென்றார். முதல்வரின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர், உதயநிதிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இந்தப் பதவிப் பிரமாணம் ஆளுநர் மாளிகையில் டிசம்பர்…

மேலும்...

கொடுமையிலும் கொடுமை – திமுக மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

மதுரை (12 டிச 2022): மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செல்லூர் ராஜூ, சென்னை நகர மேயர் காரில் தொங்கிக் கொண்டு பயணித்ததால், திமுகவைக் கடுமையாகச் சாடியுள்ளார். “திராவிட மாடல் முதல்வர், சென்னை மேயரை காரில் தொங்கி கொண்டு ஏற விட்டுள்ளார். கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை! மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஓடி வந்து காரில் தொங்கி கொண்டு வருகிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பவும் ஆட்சிக்கு வந்ததாக…

மேலும்...

கொரோனா பரவல் – சிக்கலில் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை (04 செப் 2021): கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் நடத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் அதிகம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரும் 15ஆம் தேதி வரை பல்வேறு சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வரும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட முடியாத…

மேலும்...

உதயநிதியின் பரபரப்பு கடிதம்!

சென்னை (23 ஜூன் 2021): நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு உதயநிதி மற்றும் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், “நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ள குழுவின் தலைவர் மாண்புமிகு நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களுக்கும் குழுவினருக்கும் எங்களின் அன்பு வாழ்த்துகள். இந்தக்குழு தமிழ்நாட்டின் பெற்றோர், மாணவர், ஆசிரியர், அறிவுசார் குழுக்கள் என அனைத்து…

மேலும்...

விக்னேஷ் உடலுக்கு உதயநிதி அஞ்சலி செலுத்தச் சென்றபோது என்ன நடந்தது?

அரியலூர் (13 செப் 2020): அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். விக்னேஷ் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த சென்றபோது, அங்கிருந்த பாமகவினர் உதயநிதிக்கு எதிராக கோஷமிட்டதோடு அவரை விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர் கூறுகையில், நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் விக்னேஷ் இறந்த…

மேலும்...

அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

சென்னை (20 மே 2020): கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டலின், “கொரோனா பாதிப்பு சீராகி இயல்புநிலை திரும்பும்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும். கல்வி…

மேலும்...