மத்திய பிரதேசத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஊரடங்கு உத்தரவு!

கார்கோன் (01 மே 2022): ரம்ஜான் பண்டிகை மற்றும் இந்து திருவிழாக்களையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க மத்திய பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது “ஈத் தொழுகை வீட்டில் செய்யப்பட வேண்டும். மேலும், அட்சய திரிதியா மற்றும் பரசுராமர் ஜெயந்தியில் எந்த நிகழ்ச்சியும் மாவட்டத்தில் ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்படாது, ”என்று கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (கார்கோன்) சுமர் சிங் முஜல்தா கூறினார். கடந்த ஏப்ரல் 10…

மேலும்...

ஞாயிறு ஊரடங்கு ரத்தாகுமா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை (27 ஜன 2022): தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு முப்பதாயிரத்துக்கு மேல் பதிவாகி வந்த நிலையில் நேற்றைய தினம் சற்று குறைந்து 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 5973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக கோவையில் 3740, செங்கல்பட்டில் 1883 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம்…

மேலும்...

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு- புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

சென்னை (05 ஜன 2022): தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் இரவு நேர முழு ஊ ரடங்கிற்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இரவு நேர ஊரடங்கின் போது பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், மருத்துவம் சார்ந்த பணிகள், ஏ.டி.எம்.கள்,…

மேலும்...

டெல்லியில் ஊரடங்கிற்கு நீதிபதிகள் பரிந்துரை!

புதுடெல்லி (13 நவ 2021): டெல்லியில் தேவைப்பட்டால் 2 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்ய துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.  அப்போது,டெல்லி – என்.சி.ஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் உடனடி நடவடிக்கையை…

மேலும்...

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (22 மே 2021): , தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் ஒருவாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால், மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க…

மேலும்...

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (18 ஏப் 2021): கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கு. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் சில புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த…

மேலும்...

ஊரடங்கு அறிவிப்பு வெளியாகுமா? – சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

சென்னை (30 மார்ச் 2021): ஊரடங்கு அறிவிப்பு வெளியாகலாம் என்று பரவும் தகவல் குறித்து காதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. சூழலை கண்காணித்து சூழலுக்கு ஏற்றபடி முடிவு எடுக்கப்படும். வரக்கூடிய நாட்களில் சில கட்டுபாடுகள் இருக்கும். முழு ஊரடங்கு வரப்போகிறது, இரவு நேர ஊரடங்கு வரப்போகிறது என்கிற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.” என கூறினார்.

மேலும்...

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? – தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை!

சென்னை (16 மார்ச் 2021): தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழே இருந்தநிலையில், தற்போது 25 ஆயிரத்துக்கு மேல் தாண்டி விட்டது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி புதிதாக கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த…

மேலும்...

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (29 ஜூன் 2020): தமிழகத்தில் நாளை (ஜூன் 30) ,முடிவடையும் ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீடிப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தொடரும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி மாவட்டங்களில் தற்போது அமலிலுள்ள முழு ஊரடங்கு பலனளித்துள்ளதால், அதேபோன்ற முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு…

மேலும்...

முதல் நாள் மகன் மரணம், அடுத்த நாள் தந்தை மரணம் – போலீஸ் மீது மக்கள் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி (23 ஜூன் 2020): சாத்தான்குளத்தில் மகன் போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்துவிட அடுத்த நாள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையும் இறந்துள்ளதால் சாத்தான்குளம் பகுதி பெரும் பரபரப்பாய் காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை…

மேலும்...