தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு ஸ்டாலின் வரவேற்பு!

சென்னை (30 அக் 2020): மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை….

மேலும்...

முதல்வர் எடப்பாடியுடன் ஸ்டாலின் சந்திப்பு!

சென்னை (19 அக் 2020): தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்தார். முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தனது தாயாரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற பின், நேற்று மாலை 6.05 மணிக்கு சிலுவம்பாளையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். இரவு 9.20 மணிக்கு அவர் சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில்…

மேலும்...

முதல்வர் எடப்பாடியின் தாயார் மரணம்!

சேலம் (13 அக் 2020): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவசாயி அம்மாள் (93) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் தவசாயி அம்மாள் கடந்த வெள்ளிக்கிழமையன்று முதுகு தண்டுவடம் பாதிப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அதிகாலை 1.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. தாயாரின் மறைவு செய்தியறிந்து முதலமைச்சர்…

மேலும்...

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னை (07 அக் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சமி ஒருமனதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்ற குழப்பம் ஏறக்குறைய இரண்டு மாத காலமாக நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக தெரிவித்தார். கடந்த சில…

மேலும்...