சவூதியில் கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

ஜித்தா(01 ஜன 2023)- சவூதியில் மழை தீவிரமடையும் என்ற எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) ஜித்தா, தாயிப் பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கா, ஜுமூம், அல்காமில் மற்றும் பஹ்ரா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என மக்கா கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது. நாளை பிற்பகல் 3 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை…

மேலும்...

வரும் 8 ஆம் தேதி கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை (06 டிச 2022): தமிழகத்தில் வரும் 8ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6-ம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில்…

மேலும்...

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (05 டிச 2022): அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச. 5) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அதற்கடுத்த 48 மணி…

மேலும்...

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தீவிரமாக இருக்கும் – வெதர்மேன் எச்சரிக்கை!

சென்னை (08 நவ 2022): தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 9ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு இசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து…

மேலும்...

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை (05 நவ 2022): வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 5 நாட்களாக விடிய விடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகள் என அனைத்தும் நிரம்பி வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயர்வான 24 அடியில் 21.03 அடியை எட்டியது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக…

மேலும்...

அடித்துச் செல்லப்பட்ட பேருந்து – 12 பேர் பலி!

விசாகப்பட்டினம் (20 நவ 2021): ஆந்திராவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பேருந்து அடித்த்ச் செல்லப்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 3 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. கடப்பா மாவட்டத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அனந்தபூர் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் 10 பேர் மீட்கப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நந்தலூரில் பேருந்தில் இருந்து 3 பேரும், குண்டலூரில் இருந்து 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். ND மற்றும் RF குழுக்கள்…

மேலும்...

கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு!

திருவனந்தபுரம் (18 ஆக 2020): கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 20 வீடுகள் நிலச்சரிவில் முழுவதும் சேதமானது. இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. பத்து நாட்களைக் கடந்தும் இன்னும் மீட்புப்பணி நடைபெற்றுவரும் நிலையில், தினமும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் அப்பகுதியில்…

மேலும்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

திருவனந்தபுரம் (09 ஆக 2020) கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  இடுக்கியில் அமைந்திருக்கும் மூணாறு ராஜமலா பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்டப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால்…

மேலும்...