தலித் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு!

ஈரோடு (03 டிச 2022): ஈரோட்டில் தலித் மாணவர்களை வைத்து பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்களுடன் தலைமையாசிரியை கழிவறையை சுத்தம் செய்துள்ளார். மாணவி ஒருவரின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் தலைமை ஆசிரியை கீதா ராணி தலைமறைவாக உள்ளார். புகாரின்படி, கழிவறையை சுத்தம் செய்ய தலித் மாணவர்களை…

மேலும்...

சுவர் இடிந்து விழுந்த நெல்லை பள்ளிக்கு தவறான சான்றிதழ் – அதிர்ச்சித் தகவல்!

நெல்லை (20 டிச 2021): நெல்லை பள்ளி கழிவறைச் சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் பள்ளி கழிவறைக்கு உறுதித் தன்மை குறித்துச் சான்றிதழ் வழங்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை டவுன் பகுதியில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் 17-ம் தேதி கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இச்சம்பவம் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவம் தொடர்பாக…

மேலும்...