வாக்காளர் பெயர் பட்டியலிலிருந்து சிறுபான்மையினர் பெயர்கள் நீக்கம்!

பெங்களூரு (22 பிப் 2023): கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற மத சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுபான்மை வாக்காளர்களை நீக்குவது எதிர் வரும் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்கவைக்க ஒரு உத்தி என்று சிறுபான்மை தலைவர்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து, பெங்களூரு பேராயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம், பிப்ரவரி, 15ல் மனு அளித்தனர். அதில் பெங்களூரு சிவாஜிநகர் தொகுதி வாக்காளர்…

மேலும்...

குடியுரிமை சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல – கிறிஸ்தவ சர்ச்சில் தீர்மானம்!

திருவனந்தபுரம் (26 ஜன 2020): “மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல!…” என்று லத்தின் கத்தோலிக் கிறிஸ்தவ தேவாலயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவனந்தபுரம் கத்தோலிக் கிறிஸ்தவ தேவாலய ஆயர் அங்கிருந்த கிறிஸ்தவர்கள் முன்னிலையில், தேவாலய தீர்மான கடிதம் ஒன்றை வாசித்தார். அதில், “இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல… ஒட்டு மொத்த இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான எல்லா சக்திகளுக்கும் எதிராக போராட நாம் தயாராக…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சர்ச்சில் கிறிஸ்தவர்கள் போராட்டம்!

கோவா (25 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோவா சர்ச்சில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பலதரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களை குறி வைத்து இயற்றப் பட்டுள்ள இந்த சட்டத்திற்கு பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக கிறிஸ்தவர்களும் அடக்கம். கோவா கத்தோலிக் சர்ச்சில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. CAA, NRC மற்றும் NPR ஐ எதிர்த்து…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கிறிஸ்தவர்கள் போராட்டம்!

கொல்கத்தா (20 ஜன 2020): மேற்கு வங்கத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. முஸ்லிம் கள் தவிர்த்து அனைத்து மதத்தினரும் குடியுரிமை பெறும் வகையில் உள்ள இந்த சட்டத்திற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் 8000 கிறிஸ்தவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...