பிரியா என் மகள்போல – அமைச்சர் கே.என்.நேரு!

சென்னை (23 ஆக 2022): சென்னை மேயர் பிரியா என் மகள் போன்றவர் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் நேரு, மேயர் பிரியாவை ஒருமையில் பேசியது சர்ச்சையானது. `பட்டியலினப் பெண் மேயர் என்பதால் பிரியாவை திமுக அவமதிக்கிறது… இது சாதிய மற்றும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு’ என திமுக மீதும் கே.என் நேரு மீதும் சமூக வலைதளங்களில் வீடியோவைப் பகிர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து…

மேலும்...

ரெயிலில் திருச்சி வந்த ஆக்சிஜன் – மூன்றாம் அலையையும் சமாளிப்போம்: அமைச்சர் கே.என். நேரு!

திருச்சி (05 ஜூன் 2021); சிக்ஜில் என்ற நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள 80 டன் ஆக்சிஜன், இன்று (05.06.2021) ரயில் மூலம் திருச்சி வந்து சேர்ந்தது. இதில் 16 டன் தாங்கக்கூடிய லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது. இதனைப் பார்வையிட்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, “தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இல்லை. இருப்பினும் கையிருப்பு வைத்துக்கொள்வதற்காக இவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது அலை வந்தாலும் அதை…

மேலும்...

ஆசை பட்டவர்களுக்கு பதவியில்லை – அதிருப்தியில் உடன்பிறப்புக்கள்!

திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருக்கு வழங்கப்பட்டதால் திமுக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்குப் பதிலாகத் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்குச் சென்றவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேடப்பட்டி முத்தையா மகன் மணிமாறன், மதுரை மூர்த்தி உட்பட…

மேலும்...

திமுகவில் டி.ஆர் பாலு திடீர் போர்க்கொடி – படு அப்செட்டில் ஸ்டாலின்!

சென்னை (27 ஜன 2020): டி.ஆர் பாலுவின் நடவடிக்கைகளால், திமுக தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு, தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகவும் இருந்தார். ஆனால் இரு பதவிகளில் இருப்பது சரியானதல்ல என்று கே.என்.நேருவுக்கு அறிவாலயப் பதவி கொடுக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை திமுகவுக்கு வழங்க பாஜக முன்வந்துள்ளது. ஆனால் அதனை ஏற்க ஸ்டாலின் தயாராக இல்லை. காரணம், ஏற்கெனவே பி.ஜே.பி அரசு கொண்டுவந்துள்ள…

மேலும்...

டி.ஆர்.பாலு நீக்கம் – கே.என்.நேருக்கு பதவி!

சென்னை (26 ஜன 2020): திமுகவில் டி.ஆர்.பாலு வகித்து வந்த திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டி.ஆர்.பாலு நாடாளுமன்றக் குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால், அவருக்கு பதிலாக அவர் வகித்து வந்த திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருவுக்கு வழங்கப்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கே.என்.நேருக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும்...