கட்டுக்குள் வந்த கொராணா – கட்டுப்பாடுகளை நீக்கிய நாடு எது தெரியுமா?

டோக்கியோ (29 செப் 2021): ஜப்பானில் கோவிட் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதோடு பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதால், அங்கு கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன. ஜப்பானில் கோவிட் பாதிப்பையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், ஜப்பானில் தற்போது பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது; கோவிட் பாதிப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, ஜப்பான் பிரதமர் யோஷிதே சுகா, ‘ஜப்பானில் கோவிட் பரவல் குறைந்துள்ளது. இதனால், கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்படுகின்றன. கோவிட் பெருந்தொற்றால்…

மேலும்...

அமெரிக்காவிற்குள் நுழைந்த ஆபத்து!

நியூயார்க் (22 ஜன 2020): மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி வைரஸ் காரணமாக சீனாவில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்த சூழலில், அந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ள இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் அச்சம்…

மேலும்...