கமல் சீமான் கட்சிகளின் வாக்குகளால் யாருக்கு பாதகம்? – சர்வேயில் இறங்கிய பாஜக!

சென்னை (15 ஏப் 2021): 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு நேரடி போட்டி இருந்தாலும் வாக்குகளை கணிசமான அளவில் சீமான் கட்சியினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் வாக்குகளை பிரித்துள்ளனர். இதனால் டெல்லியின் கவனம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீது தொடர்ந்து உள்ளது. அதன்படி, இரு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உளவுத்துறை அனுப்பிய…

மேலும்...

அதிமுக நிர்வாகிகள் பலர் நீக்கம் – கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை!

சென்னை (13 ஏப் 2021): அதிமுகவில் நடந்து முடிந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களால் உட் கட்சி பூசல் வெடித்தது. இந்நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை அதிமுக தலைமை நீக்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்த பலரும் வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து கடும் அதிருப்தியடைந்தனர். அறந்தாங்கியில் சில நாட்களில் பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனால், ஆலங்குடி, திருமயம் தொகுதியில் முடிவுக்கு வரவில்லை. அதாவது திருமயம் தொகுதியில்…

மேலும்...

ஆதார் மூலம் தொலைபேசி எண்னை எடுத்து வாக்காளர்களிடம் முறைகேடு செய்யும் பாஜக!

புதுச்சேரி (25 மார்ச் 2021): ஆதார் மூலம் தொலைபேசி எண்னை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட பாஜகவினர் மீது நிதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்போன் எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, ‘வாட்ஸ்அப் குழுக்கள்’…

மேலும்...

தமிழக எம்.பி முஹம்மது ஜான் மாரடைப்பால் மரணம்!

சென்னை (23 மார்ச் 2021): அதிமுக மாநிலங்களவை எம்.பி முஹம்மது ஜான் மாரடைப்பால் காலமானார். சட்டமன்றதேர்தலையொட்டி வாலாஜா அருகே பிரசாரத்தில் ஈடுபட வந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது ஜானின் உயிர் பிரிந்தது. முகமது ஜான்.2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு முகமது ஜான் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

மேலும்...

பாஜக கூட்டணியாலத்தான் தோற்கப்போறோம் – கண்ணீர் விடும் அதிமுகவினர்!

சென்னை (22 மார்ச் 2021): தமிழகத்தில் பாஜகவில் சிக்கித் தவிப்பதால்தான் தோல்வியை சந்திக்கபோவதாக அதிமுகவினர் குமுறுகின்றனர். பாஜக அரசின் இந்தி திணிப்புகள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, விவசாய சட்டம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே உறுதியாக பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவும் தோல்வியை சந்திக்கும் என்கின்றனர் திமுகவினர். மேலும் அதிமுக கூட்டணியில் பாமக, தமாகா என பல கட்சிகள் இருந்தாலும், பாஜக மட்டும் மிரட்டி கொண்டிருக்கிறது.. பாஜக…

மேலும்...

குஷ்புவை கழட்டி விட பாஜகவின் பலே திட்டம்!

சென்னை (17 டிச 2020): 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக பாஜகவின் சார்பில் குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் வரும் 2021 ஏப்ரல்-மே மாதங்களில் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என்கிற கணிப்புகள் உள்ள நிலையில், அதிமுகவுடன் தான் கூட்டணி என்பது பாஜகவில் உறுதியாகிவிட்டது. தமிழக பாஜகவும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது….

மேலும்...

தமிழக சட்ட மன்ற தேர்தலில் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் அசாதுத்தீன் உவைசி!

ஐதராபாத் (15 டிச 2020): தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க அசாதுத்தீன் உவைசி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க்க ஒரு சக்தியாக உருவெடுத்த பிறகு, அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. 2021 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் 25 இடங்களுக்கும் குறையாமல் AIMIM போட்டியிட வாய்ப்புள்ளது…

மேலும்...

லைட் அடிச்சு பார்க்க ஆசை – கமல் விருப்பம்!

சென்னை (27 நவ 2020): தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட டார்ச்லைட் சின்னத்தையே ஒதுக்க வேண்டும்,’ என தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். அதன் பிறகு நடந்த தேர்தல்களில் போட்டியிட, அக்கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, இக்கட்சி தயாராகி வருகிறது….

மேலும்...

அம்மாவின் அரசியல் வாரிசு -அனல் பறக்கும் தேனி!

தேனி (05 அக் 2020): நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேனியில் நாளைய முதல்வர் ஓபிஎஸ் என 100 அடி நீளத்திற்கு பிளக்ஸ் அமைத்து அம்மாவின் வாரிசு என கோஷமிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்ட சபை தேர்தலையொட்டி அரசியல் வியூகங்கள் நகர தொடக்கி விட்டன. களத்தில் அதிமுகவா? திமுகவா? என்ற போட்டியை விட, அதிமுகவில் ஓபிஎஸ்ஸா? ஈபிஎஸ்ஸா? என்ற குழப்பங்கள் தொண்டர்களுக்கிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி…

மேலும்...