சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கை மாற்றியது சிபிஐ!

தூத்துக்குடி (14 ஜூலை 2020): சாத்தான் குளம் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளது சி.பி.ஐ.. சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை சிபிசிஐடி காவல்துறை கொலை வழக்காக பதிவு செய்திருந்தது. வழக்‍கு விசாரணை சி.பி.ஐ.க்‍கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்‍கை கொலை வழக்‍காக சி.பி.ஐ மாற்றியுள்ளது. மேலும் முதல் குற்றவாளியாக உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ், 4-ம் குற்றவாளியாக ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொலை மற்றும் தடயங்களை…

மேலும்...

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்குத் தடை!

விழுப்புரம் (05 ஜூலை 2020): விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மதுரை உயர் நீதிமன்ற கிளை வழக்குப் பதிவு செய்து அதிரடி உத்தரவுகளை பிரப்பித்துள்ளது. மேலும் வழக்கு சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை…

மேலும்...

சாத்தான்குளம் சம்பவத்திற்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் கண்டனம்!

ஜித்தா (02 ஜூலை 2020): இந்தியன் சோசியல் ஃபோரம் (ISF) ஜித்தா பிரிவு சாத்தான்குள சம்பவத்திற்கான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரின் கொடூர தாக்குதலால் உயிரிழந்த வியாபாரிகள் பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியன் சோசியல் ஃபோரம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறோம். கடந்த ஜுன் 20, வெள்ளிக்கிழமையன்று இரவு 7.30 மணிக்கு, பொது ஊரடங்கின் போது இரவு 9மணிக்கு மேல்…

மேலும்...

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் திடீர் திருப்பம்!

தூத்துக்குடி (01 ஜூலை 2020): சாத்தான்குளத்தில் தந்தை , மகன் மரண வழக்கில் திடீர் திருப்பமாக எஸ்.ஐ. ரகு கணேஷை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர், ஜெயராஜ், 63, , இவரது மகன் பெனிக்ஸ், 31, கடந்த ஜூன், 19 இரவு, 9:00 மணிக்கு ரோந்து வந்த உள்ளூர் போலீசார், ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் கைது செய்யப்பட்டு போலீசார் அழைத்துச் சென்ற…

மேலும்...

சத்தியமா விடவே கூடாது – ரஜினி கிளப்பிய பரபரப்பு!

சென்னை (01 ஜூலை 2020): சாத்தான்குளம் விவகாரத்தில் நடிகர் ரஜினி திடீரென குரல் கொடுத்துள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிற மாநில சினிமா நட்சத்திரங்களெல்லாம் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று குரல்கொடுத்து வருகின்றனர். ஆனால் நடிகர் ரஜினி வாய்திறக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. தந்தை, மகன் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைத்தே…

மேலும்...

ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியும் தாமதிப்பது ஏன் – ஸ்டாலின் கேள்வி!

சென்னை (01 ஜூலை 2020): சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘எடப்பாடி பழனிசாமி நீங்கள், நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதுமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது. இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப்…

மேலும்...

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த அதிர்ச்சி!

தூத்துக்குடி (27 ஜூன் 2020): தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் போலீசார் தாக்கியதால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளி கணேச மூர்த்தி நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை. போலீசார் அவரை தாக்கியதே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உரிய விசரணை நடத்தக் கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போலீசார் மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர்விஜயா ஆகியோர் குடும்பத்தினருடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

மேலும்...

சாத்தான்குளம் சம்பவம் – இறந்தவர்களுக்கு சிகிச்சை மறுப்பு: வெளி வந்துள்ள பதற வைக்கும் தகவல்!

சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை எதிரில் செல்போன் கடை நடத்திவந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் கடையைத் திறந்து வைத்ததுள்ளதாக் கூறி, போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி மரணம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்நிலையத்தில் போலீஸார் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அரசு மருத்துவர் முறைப்படி பரிசோதனை செய்யாமல் ரிமாண்டுக்கு அனுப்ப எப்படிச் சம்மதித்தார் என்ற புகாரும் எழுப்பப்பட்டது. அத்துடன், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட் மற்றும்…

மேலும்...

சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம்: திமுக வழங்கல்!

சென்னை (27 ஜூன் 2020):சாத்தான்குளத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ 25 லட்சம் வழங்கப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவைவிட கொடூரமான முறையில் தமிழக காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான…

மேலும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்த உறவினர்கள்!

தூத்துக்குடி (25 ஜூன் 2020): சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த தந்தை மகன் உடல்களை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் கஸ்டடியில் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் உயிரிழந்த…

மேலும்...