அப்பா வீடு – சிறுகதை!

காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த போனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த நேரத்தில் யார்?’ யோசித்துக்கொண்டே எழுந்து, கலைந்திருந்த வேட்டியை கட்டியபடியே நடந்துசென்று கதவைத் திறந்தார். “அப்பா! நல்லாருக்கீங்களா?” என்று சிரித்தபடி நின்றிருந்தான் மகன். மருமகள் கையில் பெரிய பையுடன் நின்றிருந்தாள். “தாத்தா” என்று ஓடிவந்தான் பேரன். மழைக்கான மேகம்கூட இன்றி வானத்தில் வெயில். “வாங்க” என்று பேரன் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே சென்று ஃபேனின் வேகத்தை அதிகப்படுத்தினார். மருமகள்…

மேலும்...

சாம்பிள்-9 – சிறுகதை

இருட்டுச் சாலையில் வேகமாக வந்த கார் தனியே சென்றுகொண்டிருந்த அவளருகில் தாமதித்தது. கதவு திறந்தது. சட்டென்று ஒருவன் இறங்கி அவளை அப்படியே தூக்கி காரினுள் திணித்து, ஏறி கதவை மூடிக்கொள்ள மீண்டும் வேகமெடுத்த கார் இருட்டில் மறைந்தது. அனைத்தும் இருபது நொடிகளில் முடிந்துவிட்டன. அரவமின்றி, சாட்சியின்றி அச்சாலை உறங்கிக்கொண்டிருந்தது. பின் சீட்டில் இருவர், அவர்களுக்கு நடுவே அவள். டிரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் திரும்பிப் பார்த்து, “யப்பா… என்னா அழகு?” என்றான். “அழகு ஆபத்துடா” என்றாள் அவள். வாய்…

மேலும்...