சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ரத்து செய்தது ஒன்றிய அரசு!

புதுடெல்லி (09 டிச 2022): நாட்டின் சிறுபான்மை ஆராய்ச்சி மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை ரத்து செய்யப் பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் டி.என்.பிரதாபன் எம்.பி.யின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இதனை ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். “சிறுபான்மை மாணவர்கள் பல்வேறு சலுகைகளை பெறுவதால் இது நிறுத்தப்படுவதாக” ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். 2022-23 கல்வியாண்டிலிருந்து சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை தொடராது என்று முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர்…

மேலும்...

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவ வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை (08 டிச 2022): சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதளல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வழங்கப்பட்ட கல்வித் தொகை நிறுத்தப்பட்டதால் ஐந்தரை லட்சம் சிறுபான்மை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்...