பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனம் மீது கல் வீசி தாக்குதல்!

கொல்கத்தா (10 டிச 2020): மேற்கு வங்கத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஆவரது வாகனம் கற்களால் வீசி தாக்கப்பட்டுள்ளது. . மேலும் அவரது மேற்கு வங்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியும் காட்டப்பட்டுள்ளது. மேலும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியின் வாகனத்தையும் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கினர். விஜய வர்கீஸ் தவிர, பாஜக மேற்கு வங்க தலைவர் திலீப் கோஷின் வாகனமும் தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணாமுல்…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மீண்டும் வெடித்த போராட்டம்!

அஸ்ஸாம் (22 அக் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியதை அடுத்து அசாமில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து அசாம் மாணவர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. . நாடே கொந்தளித்தபோதும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது கோவிட் தான் என்றும், இந்தச் சட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்….

மேலும்...

சீன தூதுவருடன் ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு – பாஜக பகீர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (26 ஜூன் 2020): கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் காந்தி ரகசியமாக சந்தித்து பேசியதாக பாஜக, தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார் இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் நட்டா பேசியதாவது: கடந்த 2017 ம் ஆண்டில், டோக்லாமில் இந்தியா – சீனா படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டெல்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார். மேலும் கடந்த 2005 – 06…

மேலும்...

ஜே.பி.நட்டா பாஜக தேசிய தலைவராக தேர்வு!

புதுடெல்லி (20 ஜன 2020): பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். டில்லியில், பாஜக, தலைமை அலுவலகத்தில், தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (ஜன.,20) நடந்தது. இதில் செயல் தலைவராக இருந்த ஜே.பி.நட்டா மட்டுமே மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, ஒருமனதாக அவர் தேர்வு செய்யப்பட்டார். நட்டாவின் பெயரை, பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில தலைவர்கள் வழிமொழிந்து, மனுக்கள் தாக்கல் செய்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும், இப்போதைய தலைவருமான…

மேலும்...