மூன்று கிலோமீட்டர் ஓடிச்சென்று அவசர அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்!

பெங்களூரு (12 செப் 2022): சில மருத்துவர்களின் செயல்கள் மிகவும் மெச்சத்தகுந்ததாக இருக்கும் அப்படி ஒரு மருத்துவர் சாலையில் ஓடிச்சென்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார். டாக்டர். கோவிந்த் சர்ஜாபுரா சாலை மணிப்பால் மருத்துவமனையில் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் ஆக உள்ளார். இந்நிலையில் பித்தப்பை நோயால் கடுமையான வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது. அதன்படி மருத்துவர் கோவிந்த் மருத்துவமனையை நோக்கி அவரசமாக காரில் சென்றார். மருத்துவரின் கார் சர்ஜாபுரா-மரத்தஹள்ளி சாலையில் வந்தபோது போக்குவரத்தில் சிக்கியது. ஆனால் போக்குவரத்து…

மேலும்...

நடிகர் சூர்யாவால் டாக்டரான மாணவி!

சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும், சில சர்ச்சைகளைக்கும் உள்ளாகியுள்ளது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா இருளர் இன மக்களின் கல்விக்காக ரூ.1 கோடி நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் என்பதும் குறிப்பிடதக்கது. இதனை திரைப்பட பிரமோஷன் என்றும் கூறுகின்றனர் சிலர், ஆனால் அவரின் சமூக பங்களிப்பு 2006 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது எனலாம். கல்வியால் மட்டுமே சமூகத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்த நடிகர் சூர்யா…

மேலும்...

சென்னையில் கொரோனா பாதித்த மருத்துவர் உயிரிழப்பு – தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு!

சென்னை (13 ஏப் 2020): சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்கு பெற்று வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 60 வயது மருத்துவர் ஒருவர் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த மருத்துவரின் உடலை தகனம் செய்ய அம்பத்தூர் மயானத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காடு மயானத்தில் மருத்துவரின் உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

ஒரேஒரு டாக்டருக்கு கொரோனா – 800 பேர் தனிமையில்!

புதுடெல்லி (26 மார்ச் 2020): டெல்லியின் மௌஜ்பூரில், ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதை அடுத்து 800 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் திட்டமிடுகிறது. ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் நிலைமை மிகவும் தீவிரமாகிவிட்டது. ஸ்பெயினின் கொரோனாவினால் ஒரே நாளில் 700 பேர் இறந்தனர். வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார்….

மேலும்...

கும்பகோணம் அருகே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிக்கிய டாக்டர்!

கும்பகோணம் (21 மார்ச் 2020): கும்பகோணம் அருகே டாக்டர் ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் பகுதியில், அதிகளவில் துப்பாக்கிகள் புழக்கம் இருப்பதாகவும், இதனால் துப்பாக்கி பயன்படுத்துவது அதிகமாகியிருப்பதாகவும் குற்ற தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் எங்கு, எப்படி துப்பாக்கி கைக்கு வருகிறது; இதை யார் விற்பனை செய்கிறார்கள் என கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, கும்பகோணம் அடுத்த விளந்தகண்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்…

மேலும்...