அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!

புதுடில்லி (14 அக் 2021):பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசி அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ‘கோவிஷீல்டு கோவாக்சின்’ தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 96.43 கோடி தடுப்பூசி ‘டோஸ்’கள் செலுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே ‘சைடஸ் கேடிலா’ என்ற நிறுவனம் 12 – 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்காக ஊசியில்லா தடுப்பு மருந்தை தயாரித்துஉள்ளது. இதை அவசர காலத்தில் பயன்படுத்த…

மேலும்...

கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

புதுடெல்லி (03 ஜன 2021): கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தோன்றி ஓராண்டுக்குள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் அறிமுகமாகிறது. அதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த…

மேலும்...

செப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு!

தோஹா (18 ஆக 2020): வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் பருவகால காய்ச்சலுக்கான இலவசத் தடுப்பூசி மற்றும் அடுத்த சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி இடப்படும் என்று கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவை நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஷேக் முகமது பின் ஹமத் அல்தானி, தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், கோவிட்-19…

மேலும்...

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தின் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா?

ஐதராபாத் (05 ஜூலை 2020): இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்தை (கோவாக்சின்) கண்டுபிடித்த கிருஷ்ணா எல்லா என்பவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தை நிறுவியர் கிருஷ்ணா எல்லா. இவர் ஒரு தமிழர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவராகும். இவரது பாரத் பயோடெக்’ நிறுவனம் உலகில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கும், ‘கோவாக்சின்’ எனும் தடுப்பூசி கண்டுபிடித்து,…

மேலும்...

கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு – ராணுவ வீரர்களுக்கு முதல்கட்ட சோதனை!

மாஸ்கோ (03 ஜூன் 2020): ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும், அதற்கான ஆரம்ப கட்ட சோதனை முறையாக ராணுவ வீரர்களுக்கு அந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் அதற்கு முதலில் தடுப்பூசி கண்டுபிடித்தாக வேண்டும். அதற்கான ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடும் போட்டியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஆரம்ப கட்ட…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி!

சியாட்டில் (17 மார்ச் 2020): அமெரிக்காவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி முயற்சியில் தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தை பரிசோதனை முயற்சியாக ஒருவருக்குத் தடுப்பூசியாகச் செலத்தியுள்ளனர். இது இந்த நோய் பரவுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வேட்டையைத் துவக்கி வைத்துள்ளது. சியாட்டில் நகரிலிலுள்ள கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Kaiser Permanente Washington Research Institute) விஞ்ஞானிகள், வெகு குறைந்த நேரத்தில் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பூசியை திங்களன்று தன்னார்வலர் ஒருவரின் கையில் கவனமாகச் செலுத்தி தங்களது முதல் கட்ட…

மேலும்...