தமிழ்நாட்டின் காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதா? – திருமாவளவன் கேள்வி!

சென்னை (01 மார்ச் 2023): தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பா.ஜ.க. முயல்வதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன், “தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில்தான் இருக்கின்றன. தி.மு.க….

மேலும்...

இந்தியாவின் தேசியக்கொடியாகும் காவிக்கொடி – திருமாவளவன்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படும் என்றும் இந்தியாவின் தேசியக் கொடியாக காவிக்கொடி நியமிக்கப்படும் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும்...

தமிழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் வேறுபாடு இல்லை – திருமாவளவன்!

திருநெல்வேலி (08 ஜன 2023): நெல்லை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். புத்தாத்மானந்தா சரசுவதி சுவாமி, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா மொய்னுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சவேரியார் கலைமனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோம் வரவேற்று பேசினார். மக்கள் ஒற்றுமை மேடை மாநில அமைப்பாளர் பேராசிரியர் அருணன் பொருநை நல்லிணக்க…

மேலும்...

சூதாட்டமும் மகாபரதமும் – திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை (13 டிச 2022): சென்னை வள்ளுவர்கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், திருவள்ளுவர், பெரியாரைத் தொடர்ந்து அம்பேத்கருக்கும் காவி ஆடை, திருநீறு மற்றும் குங்குமம் இட்டு அவமதிக்கும் அமைப்புகளைக் கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவள்ளுவர், பெரியார், அண்ணா போன்றோரைக் கொச்சைப்படுத்திய சங்பரிவார் கும்பல் தற்போது அம்பேத்கரையும் கொச்சைப்படுத்தியுள்ளது. அவரது நினைவு நாளன்று அவரது உருவப்படத்திற்கு திருநீறு…

மேலும்...

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை!

சென்னை(01 டிச 2022): விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மணிமாறன் மீது விசிக தலைவர் திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டம்(தெற்கு) இலத்தூர் வடக்குஒன்றியச் செயலாளர் திரு.மணிமாறன் அவர்கள் கட்சியின் நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மூன்றுமாத காலத்திற்கு அப்பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும்...

திசைமாறும் திருமாவளவன் – கலக்கத்தில் திமுக!

சென்னை (07 அக் 2022): தமிழக அரசியலில் சமீபத்தில் புயலை கிளப்பி வருபவர் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தாலும், திமுகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த 2 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர் எஸ் எஸ் பேரணியை தடுத்து நிறுத்தியதில் திருமாவின் பங்கு மிக முக்கியமானது. எனினும் திருமா தலைமையில் நடைபெறவிருந்த சமூக நல்லிணக்க பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசை விமர்சித்திருந்தார் திருமா. இந்நிலையில் அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு…

மேலும்...

உதய்ப்பூர் வன்செயல் – திருமாவளவன் கண்டனம்!

சென்னை (30 ஜூன் 2022: உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை சம்பவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை இஸ்லாமியச் சமூகம் ஒருபோதும் ஏற்காது என்பதை அறிவோம். நுபுர் சர்மாவும் சனாதன பயங்கரவாத அரசியலின் விளைச்சல்தான். எனவே அழித்தொழிக்கப்பட வேண்டியது நபர்களல்ல; வெறுப்பை விதைக்கும் பயங்கரவாத கோட்பாடே ஆகும். நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்துவது என்பது இஸ்லாமியச் சமூகத்தைச் சீண்டி வம்பிழுக்கும்…

மேலும்...

சிறுபான்மையினரை வாக்களிக்க விடாமல் தடுக்கும் முயற்சி – திருமாவளவன் குற்றச்சாட்டு!

திருச்சி (19 டிச 2021): தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு திமுக உள்ளிட்ட காட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத் தரகர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசும்போது… மக்களவையில்…

மேலும்...

பாஜக எல் முருகன் பதவி பறிப்பு – தொல். திருமாவளவன் பரபரப்பு தகவல்!

நாகை (12 ஜூலை 2021): பாஜக தலைமையால் எல்.முருகன் அவமதிக்கப்பட்டுள்ளார் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் அலுவலகம் திறப்பு, சிதம்பரம் அடுத்த புவனகிரியில் டாக்டர் அம்ப்தேகர் கைத்தறி பட்டு சொசைட்டி திறப்பு, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் அலுவலக திறப்பு ஆகியவற்றில் பங்கேற்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். இந்நிலையில் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பாஜக தலைவராக இருந்த எல். முருகனை நீக்கியது…

மேலும்...

கல்யாணராமன் மீது நடவடிக்கை – போலீஸில் புகார் அளித்த விசிக!

சென்னை (07 ஜூலை 2021): தொல். திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பி வரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னை கமிஷனர் ஆபீசில் விசிக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. பாஜக கட்சியில் கல்யாணராமன் என்பவர், தொடர்ந்து வன்முறையைத் தூண்டி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசி, ஊடக வெளிச்சத்தில் எப்போதும் தன் பெயர் இருக்கும்படி சர்ச்சை செய்து வருபவர். சில மாதங்களுக்கு முன்பு, மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து தரக்குறைவாகப்…

மேலும்...