கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு!

திருவனந்தபுரம் (18 ஆக 2020): கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 20 வீடுகள் நிலச்சரிவில் முழுவதும் சேதமானது. இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. பத்து நாட்களைக் கடந்தும் இன்னும் மீட்புப்பணி நடைபெற்றுவரும் நிலையில், தினமும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் அப்பகுதியில்…

மேலும்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

திருவனந்தபுரம் (09 ஆக 2020) கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  இடுக்கியில் அமைந்திருக்கும் மூணாறு ராஜமலா பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்டப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால்…

மேலும்...

கேரளாவில் பரபரப்பு – தமிழகத்தினர் உட்பட 80 பேர் மாயம்!

திருவனந்தபுரம்(07 ஆக 2020): கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் மாயமாகியுள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. இந்நிலையில், கேரளா மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 80 பேரை காணவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது வரை நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பில் இருந்த 80…

மேலும்...