தமிழக ஆளுநருக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்!

சென்னை (03 நவ 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்தார். ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு…

மேலும்...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை (02 ஆக 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், ராஜ் பவனில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஒரு தடுப்பு நடவடிக்கையாக, ஆளுநர் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில்…

மேலும்...

தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர் – காரணம் ஏன் தெரியுமா?

சென்னை (29 ஜூலை 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார். உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனை அறிக்கை வாயிலாக ஆளுநர் மாளிகை…

மேலும்...

குடியரசு தினம் – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றினார்!

சென்னை (26 ஜன 2020): குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையில் தேசியக் கொடியை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஏற்றினார். நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில், சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, முப்படைகளின் ஊா்திகள், தமிழக அரசுத்…

மேலும்...