காங்கிரஸ் மீது முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (10 டிச 2022): “மாநிலங்களவையில் பொதுசிவில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தியபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இல்லை” என்று முஸ்லிம் லீக் எம்பி பி.வி அப்துல் வஹாப் குற்றம் சாட்டியுள்ளார். “தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் இல்லை என்று அவர் தெரிவித்தார். கடந்த காலங்களைப் போல் தேசிய அளவில் எதிர்க்கட்சி வரிசையில் ஒற்றுமை இல்லை.” என்று அப்துல் வஹாப் தெரிவித்தார். மேலும் ராஜ்யசபாவில் அமலாக்க சட்டம் குறித்த தனியார் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் உறுப்பினர்கள்…

மேலும்...

பொது சிவில் சட்டம் – மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தோல்வி!

புதுடெல்லி (09 டிச் 2022): : சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்ட தனிநபர் மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. பாஜக எம்பி கிரோடி லால் மீனா, பொதுசிவில் சட்ட மசோதாவை தனிப்பட்ட மசோதாவாக அறிமுகப்படுத்த அனுமதி கோரினார். ஒப்புதலுக்கு வாக்களிக்க ராஜ்யசபா சபாநாயகர் அனுமதி அளித்தார். இதையடுத்து சபையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதியாக, மாநிலங்களவையில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முன்னதாக பொது சிவில் சட்ட…

மேலும்...

பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் – அமித்ஷா உறுதி!

புதுடெல்லி (15 நவ 2022): பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேசிய ஊடகமான ‘நியூஸ்18’க்கு அளித்த பேட்டியில் அமித்ஷா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். மேலும் அதில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று எங்களது தேர்தல் அறிக்கை கூறுகிறது. எந்த மதச்சார்பற்ற நாட்டிலும், அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். அதுதான் எங்களின் வாக்குறுதி. அது நிஜமாக்கப்படும்” என்று அமித் ஷா தெளிவுபடுத்தினார்….

மேலும்...

பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்!

மும்பை (28 அக் 2020): இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த்த்தப்பட்ட வேண்டும் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். சிவசேனா ஏற்கனவே பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதில் காலதாமதம்  கூடாது என வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதில் உறுதியான முடிவை எடுக்கும் என எதிர் பார்ப்பதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் ‘ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை சீனாவின் உதவியுடன் மீண்டும் செயல்படுத்த மெஹபூபா…

மேலும்...