ECI

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!

புதுடெல்லி (08 ஜன 2022): உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அட்டவணைப்படி, இந்த ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை நடைபெறும். ஐந்து மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் முடியும். உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரின் 60…

மேலும்...

மணிப்பூர் பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி!

இம்பால் (13 நவ 2021):: மணிப்பூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணம் அடைந்தனர். மணிப்பூர் பகுதியில் அசாம் யூனிட்டை சேர்ந்த ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுராசந்த்பூரில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்தது. இதில் ராணுவ வாகனம் சீர்குலைந்து போனது. இதில் அதில் பயணித்த 7 பேர் மரணம் அடைந்ததாக ராணுவ வட்டார தகவல் தெரிவிக்கிறது. இதில் ராணுவ தளபதி மற்றும் அவரது குடும்பத்தினர் அடங்குவர்….

மேலும்...

பாஜக தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (22 ஆக 2021): மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். மாநிலங்களவை முன்னாள் எம்.பியான இல.கணேசன் பாஜகவின் தேசியக்குழு உறுப்பினராக உள்ளார். தஞ்சையை சேர்ந்த இல கணேசன் (வயது 78) தமிழக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு…

மேலும்...

மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பம்!

இம்பால் (26 ஜூன் 2020): மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பமாக தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ.க்கள் நால்வரும், மீண்டும் முதல்வர் பிரேன் சிங்கிற்கே ஆதரவு அளித்துள்ளனர். மணிப்பூரில் கடந்த 2017 தேர்தலில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜ கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், பாஜக எம்எல்ஏ.க்கள் மூன்று பேர், என்பிபி கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்கள், எம்எல்ஏ உள்பட 9 பேர் முதல்வர் பிரேன் சிங்குக்கு அளித்து வந்த ஆதரவை…

மேலும்...

மணிப்பூரில் கவிழ்கிறது பாஜக ஆட்சி – ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரல்!

மணிப்பூர் (18 ஜூன் 2020): மணிப்பூரில் கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் காங்கிரஸை விட குறைவாக 21 இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ., கட்சிக்கு 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி, மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை , ஏ.ஐ.டிசி…

மேலும்...