ஹிஜாபுக்கு தடை விதித்த மேலாளர் – பஹ்ரைனில் மூடப்பட்ட இந்திய உணவகம்!

மனாமா (27 மார்ச் 2022): பஹ்ரைனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அந்த உணவகம் அதிகாரிகளால் மூடப்பட்டது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் அமைந்துள்ள பஹ்ரைன் லான்டர்ன்ஸ் – இந்திய உணவகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உணவகம் தங்களது சமூக ஊடகப் பக்கத்தில் முறைப்படி மன்னிப்புக் கேட்டது. 35 ஆண்டுகளாக சேவையில் உள்ள உணவகம், மேலாளர் செய்த தவறுக்கு வருந்துவதாக…

மேலும்...

மூடப்படும் தமிழ் பள்ளி – மோடியின் மாநிலத்தில் நசுக்கப்படும் தமிழர்கள்!

அஹமதாபாத் (23 செப் 2020): குஜராத்தில் 81 வருட பாரம்பரிய தமிழ் பள்ளி மூடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குஜராத் அஹமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளியை மூட குஜராத் அரசு உத்தரவிட்டு கெடு விதித்துள்ளது. பள்ளியை மூட வேண்டாம் என்று மாவட்ட கல்வி அலுவலர் வரை சந்தித்துவிட்டனர் குஜராத் வாழ் தமிழ் மக்கள். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை,. இந்த பள்ளியில் படித்த ஏராளமானோர் பல்வேறு அரசுத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – சிங்கப்பூரில் அனைத்து மசூதிகளும் தற்காலிக மூடல்!

சிங்கப்பூர் (13 மார்ச் 2020): சிங்கப்பூரில் உள்ள அனைத்து மசூதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகில் எந்த நாட்டையும் விட்டு வைக்காமல் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் பல நாடுகள் கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள அனைத்து மசூதிகளும் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மேலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை கூட அங்கு நடைபெறவில்லை. இதுகுறித்து மஜ்லிஸ் உகாமா இஸ்லாம் சிங்கப்பூரா (MUIS) என்ற சிங்கப்பூர்…

மேலும்...

சவூதியில் உள்ள அனைத்து கல்விக் கூடங்களும் மூடல்!

ரியாத் (09 மார்ச் 2020): சவூதியில் உள்ள அனைத்து கல்விக் கூடங்களும் இன்று (திங்கள் கிழமை) முதல் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்படுகின்றன. சீனாவிலிருந்து பரவி, உலகையே அச்சறுத்தும் கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் பல நாடுகள் இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சவூதியில் ஏற்கனவே உம்ரா, சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக தடை, விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது, சவூதியில் உள்ள அனைத்து…

மேலும்...