குஜராத்தில் ராணுவப் படையினர் இடையே மோதல் – இருவர் சுட்டுக் கொலை!

போர்பந்தர் (27 நவ 2022): குஜராத் மாநிலம் போர்பந்தரில் ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேர்தல் பணிக்கு வந்த ராணுவ வீரர்கள், பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் ஏகே 47 துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் மணிப்பூரை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரிகள் முன்னதாக துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இரு ராணுவ வீரர்கள் காந்திநகரில் உள்ள மருத்துவமனையில்…

மேலும்...

சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு ராணுவ வீரர்கள் பலி!

புதுடெல்லி (08 நவ 2021): சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ராணுவ வீரர்களிடையே வாய்தகராறு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் ராணுவம்…

மேலும்...

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் ராணுவ வீரர்கள் 150 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

புதுடெல்லி (26 டிச 2020): குடியரசு தினம் மற்றும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள 150 வீரர்களுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் எனபது உறுதியாகியுள்ளது. அணிவகுப்புக்கான பயிற்சிக்காக டெல்லி வந்த சில வீரர்களுக்கு , பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக கோவிட் பரிசோதிக்கப்பட்டபோது அவர்களுக்கு கோவிட் பதித்திருப்பது கண்டறியப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் ஆயிரம் வீரர்கள் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. இந்நிலையில் கோவிட் உறுதிப்படுத்தியவர்கள் சிறப்பு கண்காணிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள்…

மேலும்...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்!

ஜெய்பூர் (14 நவ 2020): பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடினார். பிரதமர் ஆனது முதல் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருக்கும் லோங்கெவலா ராணுவ மையத்தில் தீபாவளியை கொண்டாட அங்கு சென்றுள்ளார். அவருடன் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து…

மேலும்...

ஆம்..!முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே! – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்!”

ஜெனீவா (10 செப் 2020): ரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் என்று அந்நாட்டு ராணுவ வீரர்கள் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர வைத்த சம்பவம் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைகள். பல லட்சம் ரோகிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக குற்றுயிரும் குலை உயிருமாக நாடுவிட்டு நாடு ஓடிப்போனார்கள்.அப்படிப் போனவர்களில் மியான்மர் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். இது தொடர்பாக திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்த இனப்படுகொலை தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. காம்பியா…

மேலும்...

இந்திய சீனா ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதல் – பரபரப்பு வீடியோ!

லடாக் (13 ஜூன் 2020): இந்திய சீன படையினர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சிக்கிமில் இந்திய மற்றும் சீன படை வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டதட்ட ஐந்து நிமிடம் ஓடும் அந்த வீடியோ காட்சிகளில், பனியால் சூழப்பட்ட அந்த மலைப்பகுதியில் இந்தியா – சீனா வீரர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். திரும்பி செல்லுங்கள், சண்டையிட வேண்டாம் என்று இரு தரப்பிலிருந்தும் வீரர்கள்…

மேலும்...

இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர் – பிரதமருக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

புதுடெல்லி (20 ஜூன் 2020): சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், “20 இந்திய வீரர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா-சீனா இடையே கிழக்‍கு லடாக்‍கின் கல்வான் பகுதியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக, மத்திய பா.ஜ.க. அரசு மீது திரு. ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீனா திட்டமிட்டே தாக்‍குதல்…

மேலும்...

ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணம்!

ஜம்மு (03 மே 2020): ஜம்மு – காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு – காஷ்மீரின் ஹந்த்வாரா என்ற பகுதியில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு, இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்….

மேலும்...

காஷ்மீரில் நான்கு ராணுவ வீரர்கள் பலி!

ஸ்ரீநகர் (15 ஜன 2020): காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக நான்கு ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், அங்கு பல மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படுகிறது. குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம், பனிச்சரிவில் சிக்கியது. இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. ஒரு வீரர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நவுகாம் செக்டார் பகுதியில்…

மேலும்...