குடியரசுத் தலைவரை அவமதித்த மோடி – வீடியோ இணையத்தில் வைரல்!

புதுடெல்லி (24 ஜூலை 2022): குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவமதிக்கும் விதமாக பிரதமர் மோடி நடந்துகொண்ட விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இதற்கான பிரிவு உபசார நிகழ்வின் பொழுது மோடிக்கு, ராம்நாத் கனிவான வணக்கம் தெரிவித்தார்.     ஆனால் அதனை சட்டை செய்யாத பிரதமர் மோடி கேமராவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும்...

கருணாநிதிக்காக தமிழகம் வரும் குடியரசுத்தலைவர்!

சென்னை (02 ஆக 2021): இன்று தமிழகம் வரும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராகவும், 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் இருந்தும், பல அழியாத முத்திரைகளை பதித்த மறைந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்து வைக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் என்றென்றும் மறக்க முடியாத அவரது உரைகள், நிறைவேற்றிய திட்டங்கள், எப்படி அரசுகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறதோ, அதுபோல இனி சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம், அங்கு அமர்ந்திருக்கும், எதிர்காலத்தில் அமரப்போகும் உறுப்பினர்களுக்கு பாடமாக விளங்கும். தமிழக…

மேலும்...

ஜனாதிபதியுடன் பிரதமர் திடீர் சந்திப்பு!

புதுடெல்லி (05 ஜூலை 2020): ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து லடாக் விவகாரம் மற்றும் கொரோனா குறித்து பேசினார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த வன்முறை நிகழ்ந்ததாக…

மேலும்...

குடியரசுத் தலைவர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற விசாரணை தேவை – பகீர் கிளப்பும் திருமாவளவன்!

சென்னை (25 மே 2020): குடியரசுத் தலைவரை ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தது குறித்து உச்ச நீதிமன்ற விசாரணை நடத்தப்படுமா? என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நுழையவிடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும்பத்துடன் வழிபாடு செய்தார். அப்போது இவ்விவகாரம் ஜாதிய ரீதியிலான துன்புறுத்தல்…

மேலும்...

குடியரசுத் தலைவர் மாளிகை மூத்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (17 மே 2020): குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் (ஏசிபி)க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஜனாதிபதி மாளிகை பணியாளர்கள் உட்பட பலர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம், ராஷ்டிரபதி பவன் வளாகத்தில், அங்குள்ள ஒரு ஊழியரின் உறவினர் கொரோனா வைரஸ் பாதிக்கபப்ட்டிருந்தது. இதனை அடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள 115 வீடுகளில் உள்ளவர்கள் தனினைப் படுத்தப்பட்டனர். எனினும் அதனை தொடர்ந்து யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில்…

மேலும்...

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவரை தாக்கினால் கடும் தண்டனை- அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி (23 ஏப் 2020): கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். ‘கொரோனா’ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, தாக்‍கியவர்கள் மீது ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு…

மேலும்...

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – சோனியா காந்தி, பிரதமர்,ஜனாதிபதி மரியாதை!

புதுடெல்லி (30 ஜன 2020): மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுவதையொட்டி, புது தில்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்…

மேலும்...

குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றினார்!

புதுடெல்லி (26 ஜன 2020): குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி ராஜபாதையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். போா் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த வீரா்களுக்கு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலுள்ள…

மேலும்...

பத்திரிகைத்துறை மீது ஜனாதிபதி காட்டம்!

புதுடெல்லி (21 ஜன 2020): நாட்டில் பத்திரிகைத் துறை பொய் செய்திகளின் கூடாரமாக உள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில், விருதுகளை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார். அவர் பேசுகையில், “பிரேக்கிங் நியூஸ் எனப்படும் செய்திகளை முதலில் அளிக்கும் பிணியால் ஊடகங்கள் பீடிக்கப்பட்டுள்ளன. இதனால், கட்டுப்பாடு, பொறுப்பு போன்ற பத்திரிகை தர்மத்தின் அடிப்படைகள் தகர்க்கப் பட்டுள்ளன. தரமான ஒரு செய்தியை…

மேலும்...