அதிமுக நிர்வாகிகள் பலர் நீக்கம் – கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை!

சென்னை (13 ஏப் 2021): அதிமுகவில் நடந்து முடிந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களால் உட் கட்சி பூசல் வெடித்தது. இந்நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை அதிமுக தலைமை நீக்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்த பலரும் வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து கடும் அதிருப்தியடைந்தனர். அறந்தாங்கியில் சில நாட்களில் பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனால், ஆலங்குடி, திருமயம் தொகுதியில் முடிவுக்கு வரவில்லை. அதாவது திருமயம் தொகுதியில்…

மேலும்...

அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!

சென்னை (22 ஜன 2021): பிற நாடுகளைப் போல பிரதமர்,முதல்வர், அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இன்று சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ”சுகாதார பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ மற்றும்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

சென்னை (20 ஜன 2021): தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறுகையில், “நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளப் கொள்கிறேன். ஒரு அமைச்சராக இல்லாமல் மருத்துவராக, ஐ எம் ஏ உறுப்பினராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன். மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் நானே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள உள்ளேன்” என்று…

மேலும்...

கேரளாவை நினைத்தால்தான் கவலையாக உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை (11 அக் 2020): கேரளாவில் கொரோனா அதி வேகத்தில் பரவி வருவது தமிழகத்திற்கு ஆபத்து என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவை சிறப்பாக கையாண்டு பாராட்டு பெற்ற கேரளாவில், இப்போது தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து…

மேலும்...

கொரோனா தடுப்பு – கலக்கும் கேரளமும் தமிழகமும்!

சென்னை (31 மார்ச் 2020): கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல் முதலாக அடி எடுத்து வைத்த மாநிலம் கேரளா. தற்போது அங்கு 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். கொரோனா இந்தியாவில் பரவ ஆரம்பித்தவுடனேயே தற்காப்பு நடவடிக்கைகளில் களம் இறங்கிவிட்டது தமிழகம். கேரளா ஏற்கனவே எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட அனுபவம் இருப்பதால் கேரளா மேற்கொண்ட தடுப்பு மற்றும் மருத்துவ நிவாரண முறைகளைக் கண்டு வியந்தவர்கள் அதே போன்று தங்கள் மாநிலத்திலும் நடை முறைப்படுத்துகின்றனர்….

மேலும்...

கொரோனா வைரஸுக்கு தமிழகத்தில் முதல் மரணம்!

மதுரை (25 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சுட்டுரைப் பக்கத்தில் உறுதிபடுத்தினார். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் சென்று வராமல் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர் ஆவார். இவருக்கு நீரிழிவு,…

மேலும்...

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி – வீடியோ!

கரூர் (02 மார்ச் 2020): கரூர் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். கரூர் மாவட்டம் மணவாடி ஊராட்சி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். பெரிய மாடு,…

மேலும்...