பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு!

சென்னை (17 டிச 2022): பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் வரும் டிசம்பர் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும்…

மேலும்...

கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை (03 நவ 2022): தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது.வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் அக்டோபர் 6ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு…

மேலும்...

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை கன்னியாகுமரி ராமநாதபுரம்…

மேலும்...

துபாய் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

துபாய் (04 ஆக 2021): ஹிஜ்ரா (முஹர்ரம் 1) புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “(முஹர்ரம் 1) புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பொது விடுமுறையாகும். இது பொது மற்றும் தனியார் துறைகளுக்கும் பொருந்தும். தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பை அனுமதிக்க வேண்டும்.” என்று அமைச்சகம்…

மேலும்...

ஊழியர்களுக்கு ஐந்து வருடங்கள் விடுமுறை அளித்து அதிர வைத்த நிறுவனம்!

புதுடெல்லி (15 ஜூலை 2020): ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஏராளமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அதிலும், ஏற்கெனவே கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது கொரோனாவால் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் நெருக்கடியை சமாளிப்பதற்காக ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக திறன்,…

மேலும்...

தமிழக அரசின் முடிவில் திடீர் மாற்றம்!

சென்னை (14 மார்ச் 2020): தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளது தமிழக கல்வித்துறை. மேலும் கேரளாவை ஒட்டிய பள்ளிகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது

மேலும்...

தமிழகத்தில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை!

சென்னை (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் முழுவதும் உள்ள எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதேபோல் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள…

மேலும்...