விநாயகர் சதூர்த்தி அன்று விநாயகர் கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கடலுர் (22 ஆக 2020): விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது கற்பூர விநாயகர் கோயில். அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் கோயில் பூசாரியாக இருந்து நாள்தோறும் சுவாமிக்கு பூஜைகள் செய்து கோயிலைக் கவனித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (21.08.2020) பூசாரி முத்து வழக்கம்போல கோயில் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். இன்று விநாயகர்…

மேலும்...

தோப்புக்கரணம் போட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சேலம் (22 ஆக 2020): விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தோப்புக்கரணம் போட்டு விநாயகனை தரிசித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதூர்த்தியை கொண்டாடியுள்ளார். மேலும் பய பக்தியோடு விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு தரிசனம் செய்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்….

மேலும்...

தமிழக அரசு மீது எச்.ராஜா காட்டம்!

காரைக்குடி (14 ஆக 2020): விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மதுக்கடைகளில் சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர். இதற்கு வாரத்தில் 6 நாட்கள் அனுமதி அளித்துள்ள அரசு, ஆண்டிற்கு 6 நாட்கள் மட்டுமே இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது. சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த முடிவை உடனடியாக…

மேலும்...