நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!

பொக்ரா (16 ஜன2023): நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டுவின் திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட Yeti Airlines Flight 691 விமானம், பொக்ரா விமான நிலைய ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. மோசமான வானிலையே காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. விபத்தின்போது 68 பயணிகளும் சிப்பந்திகளும் இருந்தனர். இச்…

மேலும்...

இரண்டாக பிளந்த விமானம்: நடந்தது என்ன?

கோழிக்கோடு : துபையிலிருந்து கேரளாவிலுள்ள கரிப்பூருக்கு வந்த ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையிலிருந்து விலகியபோது ஏற்பட்ட விபத்தில் இரு துண்டுகளாக விமானம் பிளந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்துள்ளனர். கோழிக்கோட்டிலுள்ள கரிப்பூர் விமான நிலைய ஓடுபாதை குறுகியது. இதில், விமானத்தைத் தரையிறக்குவது துல்லியமாக இருக்க வேண்டும். இல்லையேல் பெரும் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டு. வந்தே பாரத் மிஷனில் இன்று இரவு 7.41 மணிக்கு துபையிலிருந்து 191 பயணிகளுடன் ஏர் இந்தியா…

மேலும்...

விமான விபத்தில் தமிழக பெண் பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா பலி!

சென்னை (09 ஜூன் 2020): ஒடிசாவின் தெங்கனல் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரண்டு இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதில் பெண் பயிற்சி விமானி மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் கொல்லப்பட்டனர். பிரசாலாவில் உள்ள அரசு விமானப் பயிற்சி நிறுவனத்தில் (கேடிஐ) பயிற்சியாளர் விமானம் திங்கள்கிழமை காலை புறப்பட்ட பின்னர் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கேப்டன் சஞ்சிப் குமார் ஜா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா ஆகியோர் இந்த விபத்தில் உயிர் இழந்தனர் ”என்று ஏஎன்ஐ செய்தி…

மேலும்...

பாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)

ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கராச்சியின் மாடல் காலனியில் நேற்று மாலை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) பயணிகள் விமானம் 99 பேருடன் தரையில் விழுந்து நொறுங்கியது. விமான நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் கூட இல்லாத நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர், அதேவேளை 82 பேர் உயிரிழந்தது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

மேலும்...

பாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் – வீடியோ!

கராச்சி (22 மே 2020): பாகிஸ்தானில், பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்‍கு உள்ளானதில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி சென்ற ஏர்பஸ் ஏ-320 ரக பயணிகள் விமானம், கராச்சி விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. விமானம் தரையிறங்கியபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 98 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் 57 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இருவர் உயிர்…

மேலும்...

BREAKING: பாகிஸ்தான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!

கராச்சி (22 மே 2020): பாகிஸ்தானில், பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்‍கு உள்ளானதில், அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்‍கலாம் என அஞ்சப் படுகிறது. பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி சென்ற ஏர்பஸ் ஏ-320 ரக பயணிகள் விமானம், கராச்சி விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. விமானம் தரையிறங்கியபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 98 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்‍கலாம் என அஞ்சப்படுகிறது. பயணிகள்…

மேலும்...

மூன்றாக நொறுங்கிய விமானம் – 176 பயணிகள் உயிர் பிழைத்த அதிசயம்!

இஸ்தான்பூல் (06 பிப் 2020): துருக்கி விமானம் ஒன்று பயங்கர விபத்துக்குள்ளகியுள்ள நிலையில் இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து தலைநகர் இஸ்தான்புல் சபிகா காக்சன் விமான நிலையத்திற்கு நேற்று பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானம், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக சென்றது. பின்னர் ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதி நின்றது. மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்துள்ளது….

மேலும்...
உக்ரைன் விமான விபத்து

உக்ரைன் விமானத்தைத் தகர்த்தது நாங்கள் தான் – ஈரான் அதிர்ச்சி ஒப்புதல்!

தெஹ்ரான் (11 ஜன 2020): அமெரிக்கப் படைகளை நோக்கி ஏவிய ஏவுகணை, தவறுதலாக உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானத்தைத் தாக்கியது உண்மைதான் என ஈரான் சற்றுமுன் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்கள்: ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் மேற்கொண்ட 176 பேரும் உயிரிழந்தனர். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது. ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று வதந்திகள் பரவி வந்தது….

மேலும்...

ஈரான் விமான விபத்து – உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

தெஹ்ரான் (10 ஜன 2020): ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் மேற்கொண்ட 176 பேரும் உயிரிழந்தனர். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளதால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உக்ரைன் விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பு, ஈரான் தனது ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது வீசி…

மேலும்...

ஈரான் விமான விபத்தில் பயணிகள் அனைவரும் பலி!

தெஹ்ரான் (08 ஜன 2020): உக்ரேன் விமான விபத்தில் பயணம் மேற்கொண்ட 176 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 737 போயிங் ரக விமானம், சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 176 பயணிகளும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும்...